News

பாதையைக் கடப்பதா? இல்லையா?

By In

வீதியைக் கடப்பது கொழும்பில் எந்நேரமும் ஒரு ஒழுங்கான முறையில் நடைபெறும் செயல் அல்ல. இருப்பினும் நகரின் சில பகுதிகளில், முக்கிய வீதிகளில், வீதியின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் கடக்கும் பாதசாரிகளின் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியாக மக்களால் “வண்ண விளக்குகள்” (colour lights) என்று அழைக்கப்படுகின்ற பெடஸ்ரியன்ஸ் க்ரொஸிங்ஸ் (pedestrians   crossings) நிறுவப்பட்டுள்ளன.

 

ஆளிகளால் இயக்கப்படும் இந்த உபகரணங்கள் எவ்வாறு திட்டமிடப்பட்டு இயக்கப்படுகின்றன? மேலும், பல ஆளிகள் உடைந்து அல்லது காணாமல் போயுள்ளதுடன் சில சமயங்களில் இந்த ஆளிகளைக் கொண்ட பேனல்கள் (panels) கூட நொறுக்கப்பட்ட நிலையில் காணப்படுவது ஏன்? குறிப்பாக உச்ச வாகன நெரிசல் உள்ள நேரங்களில் இது எந்த அளவிற்கு பிரச்சினையாக உள்ளது?

பாதசாரிகள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறைகளின் இந்த குறிப்பிட்ட அம்சங்களைப் பற்றி மேலும் அறிய, ஒரு தகவல் அறியும் உரிமை (RTI) விண்ணப்பம் கொழும்பு மாநகர சபைக்கு அனுப்பப்பட்டு பின்வரும் தகவல்கள் பெறப்பட்டன.

ஒரு பாதசாரி கடக்க வேண்டியிருக்கும் போது, ​​அவர்கள் முதலில் ‘Push’ ஆளியை அழுத்த வேண்டும். வாகனங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட குறைந்தபட்ச ‘பச்சை’ நேரம் (green time) ஏற்கனவே கடந்துவிட்டால், பாதசாரி சாலையைக் கடக்கலாம் என்பதைக் குறிக்கும் ‘பச்சை மனிதன்’ சமிக்ஞை ஒளிரும். இது, 3 வினாடி செம்மஞ்சள் விளக்கு (amber light) நேரத்திற்குப் பின், வாகனங்களை நிறுத்துவதற்கு சமிக்ஞை செய்யும் சிவப்பு விளக்கு வருவதற்கு முன்பு, நிகழும்.

இந்த பச்சை மனிதன் சமிக்ஞை ஒளிரும் நேரம் பிரதானமாக வீதியின் அகலத்துடனும் வீதி இருக்கும் இடத்துடனும் மாறுபடும். இது பொதுவாக 10 – 20 வினாடிகள் நீடிக்கும்.

‘Push’ ஆளியை அழுத்தியதும், வாகனங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட குறைந்தபட்ச பச்சை நேரம் இன்னும் முடிவடையவில்லை என்றால், பாதசாரி அது முடியும் வரை காத்திருக்க வேண்டும். வாகனங்களுக்கான குறைந்தபட்ச பச்சை நேரமும் இடத்தைப் பொறுத்து மாறுபடும்; இந்த காலம் பொதுவாக 40 வினாடிகள் முதல் 90 வினாடிகள் வரையான காலமாக இருக்கும்.

பாதசாரி நிற்கும் பக்கத்தில் (நடைபாதையில்) உள்ள ஆளி செயல்படவில்லை என்றால், அப்பாதசாரியிற்கு எதிர்பக்க நடைபாதையில் உள்ள ஆளியில் அவர் தங்கி இருக்க வேண்டும். பராமரிப்பு ஒப்பந்தக்காரர் (maintenance contractor) வழக்கமான வருகைகளின் போது சேதமடைந்த ஆளிகள் மற்றும் ஆளி பேனல்களைப் பற்றி அறிந்து கொள்கிறார். அல்லது சமிக்ஞை கம்பத்தில் வழங்கப்பட்டுள்ள எண்ணுக்கு பொது மக்களிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் இவற்றைப் பற்றி அறிந்து கொள்கிறார். (இரண்டு பராமரிப்பு ஒப்பந்தக்காரர்களின் தொலைபேசி எண்கள் சமிக்ஞை கம்பத்தில் வழங்கப்பட்டிருக்கும்.) அவ்வழியிலுள்ள போக்குவரத்து பொலீசாரும் ஒப்பந்தக்காரரை தொடர்பு கொண்டு அவருக்கு தெரிவிப்பார்கள்.

கொழும்பு மாநகர சபை மேலும் குறிப்பிடத்தக்க சில விடயங்களை வழங்கியது. அவர்களின் படி, சில இடங்களில் ஆளி பேனல்களும் சேதம் செய்யப்பட்டுள்ளன (vandalised). இது ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் அடிக்கடி நடந்து வந்துள்ளது என்று அவர்கள் கூறினர்.

இருப்பினும், சில பிரச்சினைகளைக் குறைப்பதற்காக தடுப்புகள் (deterrents) ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இவ்வுபகாரணத்தில் போலியான பச்சை மனிதன் சமிக்ஞைகள் தோன்றுவதைத் தடுக்க, சில இடங்களில் பாதசாரி கண்டறிதல் கேமராக்கள் (pedestrian detector cameras) பொருத்தப்பட்டுள்ளன.

News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *