கடந்த இரண்டு தசாப்தங்களாக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களின் விளைவாக, 2017 ஆம் ஆண்டில் இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுலாகியது. அதன்படி, பொதுமக்களுக்கு பரந்துபட்ட விடயங்களில் வெளிப்படையான தகவல்களைப் பகிரங்க அதிகாரசபைகளிடமிருந்து பெறுவதற்கான வாய்ப்பை 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழங்குகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் தகவல் அறியும் உரிமையை தொடர்ந்து பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பொதுமக்களின் புரிதலை அறிந்து கொள்வதற்காக இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் தனது சமூக ஊடகத் தளங்களில் தொடர்ச்சியான கருத்துக் கணிப்புகளை ஆரம்பித்தது. அதன்படி, வாக்கெடுப்பின் ஆரம்பத்தில், பகிரங்க அதிகாரசபைகளிடமிருந்து பிரஜைகள் தகவல்களை கோரலாமா? என்று வினவப்பட்டது. இது குறித்து பொதுமக்களுக்கு ஒரு வாரம் கருத்து தெரிவிக்க அனுமதி வழங்கப்பட்டது.
வாக்கெடுப்புகளின் முடிவுகளின்படி, பதிலளித்தவர்களில் 76% பேர் ஒரு பிரஜையாக எந்தவொரு பகிரங்க அதிகாரசபைகளிடமிருந்தும் தகவல்களைப் பெற முடியும் என்று தங்களுக்குத் தெரியும் என்றும் 24% பேர் ஒரு பிரஜையாக எந்தவொரு பகிரங்க அதிகாரசபைகளிடமிருந்தும் தகவல்களைப் பெற முடியும் என்று தங்களுக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளனர். முடிவுகள் பின்வருமாறு.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 5 இன் விதிகளின்படி, ஒரு பகிரங்க அதிகாரசபை வசமுள்ள, நம்பிக்கை அல்லது கட்டுப்பாட்டில் உள்ள தகவல்களை அணுக பொதுமக்களுக்கு உரிமை உண்டு. மேலும், தகவல் சுதந்திரச் சட்டத்தின் பிரிவு 43 ஆனது பகிரங்க அதிகாரசபை என்றால் என்ன என்பதை தெளிவாக வரையறுக்கிறது.
பகிரங்க அதிகாரசபை என்றால் என்ன என்பது பற்றிய தெளிவான புரிதலைப் பெற, நாம் முன்னர் வெளியிட்ட கட்டுரைகளை பின்வரும் இணைப்பு வழியாக பார்வையிடலாம்.
Recent Comments