News

நொச்சியாகம மாற்று வழிப்பாதை நிர்மாணம் பற்றிய தகவல் அறிய தகவல் சட்டம் உதவியது

By In

பாதைகளின் பராமரிப்புக்கும் அபிவிருத்திகுமாக வருடாந்தம் மில்லியன் கணக்கிலான நிதி ஒதுக்கப்பட்டாலும் இலங்கையின் பல பகுதிகளில் பாதைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
நொச்சியாகம பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் குறிப்பாக ஜயகம பகுதிக்கான பாதை மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து இருக்கின்றது. அதிலும் தொம்பலகம மற்றும் ஓழுவெவ பிரதேச செயலக பகுதி பாதைகள் மிகவும் மோசமானதாக உள்ளன. குன்றும் குழியுமாக உள்ள பாதைகளை குறைத்த பட்சம் திருத்தி சிரமம் இன்றி பயணம் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
2012 ஆம் ஆண்டு தெயட கிருல கண்காட்சி நடைபெற்றபோது தற்காலிக நிவாரணமாக பாதைகள் அரசாங்கத்தால் பழுது பார்க்கப்பட்டன. இருந்தலும் பிரத்தியேகமான மாற்று வழிப்பாதை திருத்தப்படவில்லை. மொரவக கந்த மற்றும் முதிதகம ஆகிய பாதைகள் ஏழு கிலோமீட்டர் தூரமானகதாக இருந்தபோதும் 200 மீட்டர் தூரத்திற்கு மாத்திரமே கொங்ரீட் போடப்பட்டது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. அந்த செயலமர்வில் பங்குபற்றிய அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் குழுவொன்று நொச்சியாகம பிரதேச பாதைகளை நிர்மாணிக்கவும் பராமரிக்கவும் எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டது என்ற தகவல்களை அறிவதற்காக தகவல் அறிவதற்கான சட்டத்தை பன்படுத்தி 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பம் சமர்ப்பித்தனர்.
ஆந்த விண்ணப்பத்திற்கு வழங்கப்பட்ட பதிலில் மத்திய அரசாங்கத்தால் பாதை அபிவிருத்திக்காக 64,00000 ருபா அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதும் நொச்சியாகம பிரதேச சபைக்கு எந்தவிதமான நிதியும் வழங்கப்பட வில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரதேச செயலக பிரிவில் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அதற்கான பணம் விடுவிக்கப் பட்டிருக்கவில்லை
தகவல் கேரிய இளைஞர்களுக்கு தகவல் அறிவதற்கான சட்டம் நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் பாதை புணரமைப்பு வேலைகளின் தாமதத்திற்கான காரணம் பற்றியும் அறிந்து கொள்ள உதவியாக அமைந்திருக்கின்றது. தொடர்ச்சியாக அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணிக்கவும் அது தொடர்பாக கேள்வி எழுப்பவும் தகவல் சட்டம் பயன்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். அத்துடன் இதன் நன்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி மக்களை அறிவூட்டல் செய்ய வேண்டும் என்றும் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தகவலானது நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் இணைந்து நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய ஒருவரால் சமர்ப்பிக் கப்பட்டதாகும்.

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *