கடந்த காலத்தில் நாம் எவ்வளவு முன்னேறியிருந்தாலும், பாலின சமத்துவத்தின் நிலை இன்னும் சர்ச்சைக்குரியது. இது குறிப்பாக ஊடகத் துறையில் உள்ளது. ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் ஊடகத் துறையில், பெண்களின் பிரதிநிதித்துவம் ஆண்களை விட கணிசமாகக் குறைவாகவே உள்ளது என்று யுனெஸ்கோ சுட்டிக்காட்டுகிறது.
2020 பிப்ரவரி 26-27 திகதிகளில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்துடன் இணைந்து யுனெஸ்கோ புது டெல்லி அலுவலகம் ஏற்பாடு செய்த பெண் ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சிப்பட்டறையில் பேசிய யுனெஸ்கோ புது டெல்லியின் இயக்குநர் எரிக் ஃபால்ட் கூறுகையில், ஊடகங்களில் பாலின சமத்துவம் ஊடக சுதந்திரத்திற்கான ஒரு முக்கியமான முன் நிபந்தனையாகும் என்று யுனெஸ்கோ நம்புவதாக கூறினார்.
அதன்படி, 2020 ஆம் ஆண்டில் அரசாங்க தகவல் திணைக்களத்திடம் பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை கோரி இரண்டு சந்தர்ப்பங்களில் அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு தகவலறியும் விண்ணப்பத்தை சமர்ப்பித்தோம்.
அதன்படி, ஊடகத் துறையில் பணிபுரியும் நபர்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவு செய்து, அது வழங்கிய ஊடகவியலாளர் அடையாள அட்டையைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் பின்வரும் தகுதிகளைப் கொண்டிருக்க வேண்டும்.
1. அங்கீகரிக்கப்பட்ட ஊடக நிறுவனத்தில் குறைந்தபட்சம் 06 மாதங்களாவது நிரந்தர அல்லது ஒப்பந்த அடிப்படையில் ஊடகவியலாளராக பணியாற்றியிருக்க வேண்டும்.
2. தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட இலத்திரனியல் அல்லது அச்சு ஊடக அமைப்பில் சுயாதீன ஊடகவியலாளராக குறைந்தது ஒரு வருடம் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும்.
இதன்படி, ஊடகவியலாளர்களின் 3113 அடையாள அட்டைகள் 2020 ஆம் ஆண்டிற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்களில் 904 பெண்கள். அந்த எண்ணிக்கை பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.
- ஊடகவியலாளர்கள் 835
- இணைய ஊடகவியலாளர்கள் 44
- ஊடக சேவைகள் 25
(இந்த தகவல் 2020 ஆம் ஆண்டில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட பெண் ஊடகவியலாளர்களுடன் தொடர்புடையது. பயிற்சி அடிப்படையில் பணிபுரிபவர்களுக்கு அடையாளஅட்டைகள் வழங்கப்படாததால் தற்போது பணிபுரியும் ஊழியர்களின் உண்மையான எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கலாம்)
இருப்பினும், இந்த தகவலுடன் ஒப்பிடுகையில், 2020 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, தொழில்முறை ஊடகவியலாளர்களாக பெண்களின் பிரதிநிதித்துவம் 29.03% ஆக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Recent Comments