தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது இலங்கை குடிமக்கள் அவர்கள் கோரிய மொழியில் (சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம்) பொது அதிகாரிகளிடமிருந்து பதில்களை வழங்கக்கூடிய கோட்பாட்டில் வடிவமைக்கப்பட்ட ஒரு சட்டமாகும்.
எவ்வாறாயினும், தகவல் அறியும் படிவத்தில் கோரிக்கையாளர் அணுகலை விரும்பும் மொழி குறிப்பிடும்போது ஒரே விதமான அனுபவம் பல முறை பெறப்பட்டுள்ளது; படிவத்தில் கூறப்பட்ட மொழியை/மொழிகளைக் காட்டிலும் ‘முடிவு நிலுவையில் உள்ளது’ (decision pending) கடிதம் மற்றும் தகவல்களைக் கொண்ட பதில் கடிதம் ஆகிய இரண்டுமே விண்ணப்பப் படிவத்தில் கூறியதைத் தவிர வேறு மொழியில் கோரிக்கையாளரால் பெறப்பட்டுள்ளன.
கோரப்பட்ட மொழி தமிழ் அல்லது ஆங்கிலமாக இருக்கும்போது இது ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் நடந்ததுள்ளது என்று அறியப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில், அரச அமைச்சகம் அல்லது திணைக்களத்திலிருந்து பதில் ஆங்கிலம் அல்லது தமிழில் இருக்குமாறு கோரும் ஒரு விண்ணப்பதாரருக்கு பதில் சிங்களத்தில் கிடைக்கின்றது. உதாரணமாக, கொழும்பில் பிச்சைக்காரர்கள் தொடர்பான தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சு பதிலளித்த போது இந்நிலைமை ஏற்றப்பட்டது; அவர்களின் பதில் சிங்களத்திலேயே பெறப்பட்டது. கொழும்பு மாநகரசபையிலிருந்து தெரு விளக்குகள் செயல்படுவதைப் பற்றிய கேள்வி கேட்கும்போதும் நடந்தது இதுவே.
தகவல் கோருபவர் கூறும் மொழியில் தகவல்களை வழங்க முடிகிறது என்பதை உறுதிப்படுத்துவது ஒவ்வொரு பொது அதிகாரத்தினதும் பொறுப்பல்லவா? அப்படியானால், மூன்று மொழிகளிலும் தகவல் கோரிக்கைகளை கையாளும் திறனுக்காக போதுமான தகவல் அதிகாரிகள் மற்றும்/அல்லது மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பதில் இந்த பொது அதிகாரிகள் என்ன சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்?
Recent Comments