News

தடையையும் மீறி தொடரும் புதிய அரச நியமனங்கள்

By In

க.பிரசன்னா

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட வாசிப்பில் அரச ஊழியர்கள் அரசாங்கத்துக்கு  பெரும்   சுமையாக   இருப்பதாக  முன்னாள்  நிதியமைச்சர்  பசில் ராஜபக்ச குறிப்பிட்டிருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் அரச தொழில் வாய்ப்புகளுக்கு புதியவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையும் இடைநிறுத்தப்பட்டிருந்தது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திலும் புதிய ஆட்சேர்ப்பு பணிகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. எனினும் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதியுடன் 30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெற்ற நிலையில் புதிய நியமனங்கள் வழங்குவது தொடர்பில் பிரதமரினால் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.  

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும் திறைசேரியில் போதிய பணமில்லாத நிலையிலும் அரச செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2023 வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 5 வீத செலவின குறைப்பை மேற்கொள்ளுமாறும்   சகல அமைச்சுக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று 6 மாத காலப்பகுதிக்குள்    243  தொழில் நியமனங்கள்   புதிதாக   வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.  

21.07.2022 ஆம் திகதி முதல் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் வழங்கப்பட்ட ஜனாதிபதி ஆலோசகர்கள், பணிப்பாளர்கள், ஊடகப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட நியமனங்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல் அதிகாரி சிசிர ஹேனாதீரவுக்கு 19.08.2022 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு உரிய பதில் வழங்கப்படாமையினால் 10.10.2022 ஆம் திகதி குறித்தளிக்கப்பட்ட அதிகாரியான  ஜனாதிபதியின்  மேலதிக  செயலாளர்  கலாநிதி சுலக்ஷன ஜயவர்தனவுக்கு மேன்முறையீடு மேற்கொள்ளப்பட்டது.

எனினும் மேன்முறையீட்டுக்குப் பின்னர் குறித்தளிக்கப்பட்ட அதிகாரியினால் நேரடியாக அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு 2023.01.11 ஆம் திகதி தகவல் கோரிக்கைக்கு பதில் வழங்கப்பட்டது. அதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த வருடம் நவம்பர் மாதம் வரை 243 புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களின் மாத சம்பளத்துக்காக 15,963,339 ரூபா ஒதுக்கப்படுவதுடன் எரிபொருள் கொடுப்பனவாக 4,246,324 ரூபாவும் தொலைபேசி கொடுப்பனவாக 159,000 ரூபாவும் மாதாந்தம் வழங்கப்படுகின்றது.

இதேவேளை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 243 அதிகாரிகளின் கீழ் பணியாற்றுவதற்கு 76 ஊழியர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களின் கொடுப்பனவுகளுக்காக மாதாந்தம் 756,662 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் எரிபொருள் கொடுப்பனவுக்காக 275,125 ரூபாவும் தொலைபேசி கொடுப்பனவாக 16,500 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிதாக வழங்கப்பட்ட நியமனங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட ஊழியர்களில் சிலர் ஏற்கனவே பதவியில் இருந்தவர்களுக்கு மாற்றீடாக நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23.12.2022 ஆம் திகதி வரை ஜனாதிபதி செயலகத்தில் தங்களது கடமைகளை நிறைவேற்றுவதற்காக அதிகாரிகளுக்கு 84 வாகனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் தற்போது 750 ஊழியர்கள் (2022.05.30) பணியாற்றி வருகின்றனர். இவர்களின் கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் 524.72 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் ஊதிய கொடுப்பனவுகளுக்காக 485.11 மில்லியன் ரூபாவும் எரிபொருள் கொடுப்பனவுக்காக 27.57 மில்லியன் ரூபாவும் போக்குவரத்து கொடுப்பனவுக்காக 8.94 மில்லியன் ரூபாவும் தொலைபேசி கொடுப்பனவுக்காக 3.07 மில்லியன் ரூபாவும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போசாக்கு கொடுப்பனவிலும் முறைகேடுகள்?

க.பிரசன்னா கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் நன்மை கருதி அரசாங்கத்தால் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சால் போசாக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு…

By In
News

ஊழியர்களின் நலனுக்காக இடமாற்றப்படும் நோர்வூட் பிரதேச செயலகம்

க.பிரசன்னா நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்க வேண்டுமென கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 10 பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான…

By In
News

தேர்தல் சட்டத்தை மீறிய அரச அலுவலர்களுக்கு தண்டனையில்லையா?

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி இலங்கை ஜனநாயக பாரம்பரியத்தின் நீண்டகால வரலாற்றை கொண்டுள்ள நாடாகும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் ஜனநாயக ஆட்சி முறையின் அடித்தளமாகும். அதனைப் பாதுகாப்பதற்கும்,…

By In
News

இலங்கையில் பிறப்புகள் குறைவடைவதற்கும் இறப்புகள் அதிகரிப்பதற்கும் பின்னணியிலுள்ள இரகசியம் என்ன?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிக் கொணரப்பட்ட தரவுகள் முகமது ஆசிக் குடித்தொகை வளர்ச்சி பற்றிய தகவல் மற்றும் தரவுகளை குடித்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *