காலி மாவட்டத்தில் நியாகம பிரதேச செயலக பிரிவு அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் ஒரு இடமாக இருந்து வருகின்றது. இப்பிரதேச மக்களின் விவசாயம், சொத்துக்கள், உடமைகள் என்பவற்றை வெள்ளம் காரணமாக இழந்துள்ள அனுபவம் அக்கிரம மக்ளுக்கு நிறைய இருக்கின்றது. ஒவ்வொரு பருவப் பெயர்ச்சி மழை காலங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக தங்குவதற்கான இடங்களாக பாடசாலை, தேவாலயம் போன்ற இடங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வெள்ள பாதிப்பின் போது தற்காலிக இருப்பிடங்களாக பாடசாலைகள் பயன்படுத்தப்படும் போது அவர்களது குழந்தைகளது கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டு கற்றல் ஸ்தம்பிதம் அடைகின்றது.
வெள்ள காலங்களில் தற்காலிகமாக ஊர் மகக்ளுக்கு தங்குவதற்கான இடம் ஒன்றை அமைத்து தருமாறு பல முறை அதிகாரிகளுக்கு மக்கள் வேண்டுகோள் விடுத்து வந்துள்ளனர். அதற்கமைய அத்தகைய சந்தர்பப்ங்களில் பயன்படு த்தவென கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான நிர்மாண வேலைகள் ஆரம்பிகக்ப்பட்டது. ஆனாலும் அந்த கட்டிட வேலைகள் பூரணப்படுத்தப்படாமல் தடை பட்டிருக்கின்றது. அரசியல் ரீதியான நிச்சயமற்ற நிலைமைகளே இவ்வாறாக கட்டிட நிர்மாண வேலைகள் தாமதமடைய காரணம் என்று நிர்மாண ஒப்பந்தக்காரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. அந்த செயலமர்வில் பங்குபற்றிய அப்பிரதேசத்தைச் சேர்ந்த குழுவொன்று தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் பற்றி அறிந்து கொண்டவுடன் அந்த சட்டத்தை பன்படுத்தி இந்த கட்டிட நிர்மாண நடவடிக்கைகளின் நிறுத்தம் தொடர்பாக 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் ஒன்றை சமர்ப்பித்து தகவல் கோரினர்.
அந்த தகவல் விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் வகையில் கட்டிட நிர்மாண வேலைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப் பட்டது.
அவர்களது வேண்டுகோளின்படி ஏக காலத்தில் கட்டிட நிர்மாண வேலைகள் நிறைவு செய்யப்பட்டு பொது பயன்பாட்டிற்காக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதையிட்டு அப்பிரதேச மக்கள் தகவல் அறிவதற்கான சட்டத்திற்கு பாராட்டை தெரிவிக்கின்றனர். தகவல் சட்டம் அவர்களுக்கு வெற்றியை தந்ததாக அவர்கள் கருதகின்றனர்.
இந்த முன்னேற்ற அறிக்கையானது இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் இணைந்து நடத்திய தகவல் அறிவதற்கான சட்டம் பற்றிய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களால் சமர்ப்பிக்கப்பட்டதாகும்.
இந்திய இழுவை மடி படகுகளால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம்
க.பிரசன்னா பல தசாப்தங்கள் நீடிக்கும் இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையானது, இலங்கை – இந்திய இராஜதந்திர உறவுகளில் அவ்வப்போது நெருக்கடிகளைத் தோற்றுவித்து வருகின்றது. மீனவர்களின் பிரச்சினையை…
2022 கலவரம்: பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இழப்பீடுகளுக்கு 50 மில்லியன் ரூபா மேலதிக நிதி விடுவிப்பு?
க.பிரசன்னா உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்ததுமான காலி முகத்திடல் (அரகலய) போராட்டம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும், அதனைச் சுற்றிய…
10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!
ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில் பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…
போதையில் மூழ்கும் சமூகம்; அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்
2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…
Recent Comments