2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க சட்டத்தின் அடிப்படையில் தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் கடந்த ஆகஸ்ட் 04 ஆம் திகதி இலங்கையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தகவல் அறிவதற்கான நுழைவுக்கான வசதிகளை ஏற்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமானதாகின்றது.
அதன்படி இந்த சட்டம் தொடர்பாக கம்பஹா மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான அறிவூட்டல் செயலமர்வொன்று 2017 ஜூன் மாதம் 15 ஆம் திகதி கம்பஹா சாக்ய ஹோட்டலில் நடைபெற்றது. இந்த செயலமர்வை இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு அணைக்குழுவின் கமல் லியனாரச்சி மற்றும் சட்டத்தரணி ராதிகா குணரத்ன ஆகியோர் நடத்தினர்.
Recent Comments