News

தகவல் அறிவதற்கான சட்டம் களனி பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பட்டப் படிப்பின் விண்ணப்பப் படிவத்தை பாதுகாத்தது

By In

இலங்கை ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எழுத்தறிவு வீதத்தில் உயர்ந்த ஸ்தானத்தை அடைந்திருந்தாலும் கல்வித்துறையில் பல பிரச்சினை களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது. வருடாந்தம் முதலாம் வகுப்பிற்கு 300.000 இலட்சம் குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர் அவர்களில் குறிப்பிட்ட ஒரு விகிதமே க.பொ.த.(உ.தர)த்தில் கல்வி கற்று சித்தியடைந்து போதுமான வெட்டுப் புள்ளியை பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை பெறுகின்றனர். அதிலும் மிகவும் குறைந்த எண்ணிக்கையினர் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு புலமைப்பரிசில் பெற்று செல்கின்றனர். இன்னும் ஒரு பிரிவினர் இலங்கையில் உள்ள கல்விக் கல்லூரிகளில் அனுமதியை பெற்று நுழைகின்ற அதே நேரம் எஞ்சுகின்றவர்களில் ஒரு குழுவினர் தேசிய பல்கலைக்கழகங்களில் வெளிவாரியாக கற்று பட்ட சான்றிதழை பெறுகின்றனர்.
இவ்வாறு வெளிவாரி கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும் பலதரப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றமை தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் ஒன்றை சமர்ப்பித்த போது தெரிய வந்திருக்கின்றது.
அத்தகைய ஒரு மாணவராக லசந்த 2015 ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழகத்தில் வெளிவாரி கற்கைநெறிக்கு பதிவு செய்யப்பட்டார். 2014 ஆம் அண்டு பதிவு செய்யப்பட்டு முதலாம் வருட பரீட்சைக்கு தோற்ற இருந்த போதும் அதில் நீண்ட தாமதம் ஏற்பட்டது. குறுகிய காலத்தில் பட்டம் ஒன்றை பெற்று தொழில் சந்தையில் நுழைய காத்திருக்கும் மாணவர்களுக்கு இந்த நிலைமை ஒருவிதமான உள ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இதுபோன்ற நிலைமைகள் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகின்றன.
இவ்வாறு உள ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவரான லசந்த தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி அறிந்துகொண்டார். இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் இணைந்து தகவல் மற்றும் தொடர்பாடல் தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் அவரும் பங்குபற்றினார்.
2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறிவதற்கான சட்டம் பற்றிய அறிவைப் பெற்றுக்கொண்ட பின்னர் லசந்த முதல் பரீட்சை மற்றும் அதனைத் தொடர்ந்து எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக களனி பல்கலைக் கழகத்திற்கு உரிய பதில்களை வழங்குமாறு விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பத்தார். 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் அவரது விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கப்பட்டது.
மாணவர் சமூகமும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அடங்கி விளக்கம் ஒன்றை குறித்த விண்ணப்பத்திற்கு பதிலாக களனி பல்கலைக் கழகத்தின் தொலைக் கல்வி தொடர் கற்கைப் பிரிவு வழங்கியது. சமர்ப்பிக்கப்பட்ட பதில் மாணவர்கள் மத்தியில் அவர்களால் எதிர்நோக்கப்படுகின்ற பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை வழங்கும் என்ற ஒரு எதிர்பார்பபை ஏற்படுத்தவதாக அமைந்திருந்தது.
தகவல் அறிவதற்கான சட்டம் மாணவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளை வெளிக் கொண்டு வந்து தீர்வை நாடச் செய்வதற்கு உதவியதாக லசந்த தெரிவிக்கின்றார். தற்செயலாக அவர் இந்த செயலமர்வில் பங்குபற்றியதால் இந்த அறிவு கிடைத்ததோடு எதிர்காலத்தில் தகவல் அறிவதற்கான சட்டத்தை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்த பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
அடையாளம் மாற்றப் பட்டிருக்கின்றது.
இந்த தகவல் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் இணைந்து தகவல் மற்றும் தொடர்பாடல் தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய ஒருவரால் வழங்கப்பட்டதாகும்.

News

20 அரச நிறுவனங்களின் மூலம் அரசாங்கத்துக்கு 85 ஆயிரம் கோடி ரூபா இழப்பு!

க.பிரசன்னா நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மறுபுறம் அரசுக்கு அதிக செலவை…

By In
News

2025 மார்ச் முதல்முழுமையாக அமுலுக்கு வரும் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம்

ஜனக சுரங்க தனிப்பட்ட தரவின் செயலாக்கத்தை ஒழுங்குபடுத்துதல், தனிப்பட்ட தரவைப் பாதுகாத்தல், தரவு பங்களிப்பாளர்களின் உரிமைகளை அடையாளம் கண்டு வலுப்படுத்துதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு, இலங்கை பிரஜைகளுக்கு…

By In
News

ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதை உறுதிப்படுத்தும் பாராளுமன்ற தரவுகள்!

தனுஷ்கசில்வா ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களின் ஒரு தசாப்தகால வரலாற்றை இலங்கை நாடாளுமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது. 2006 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஊடகவியலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அபாயகரமான…

By In
News

எல்லைகள் வரையறுக்கப்படாது தனியார் பல்கலைக்கழகத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கீரிமலை ஜனாதிபதி மாளிகை!

ந.லோகதயாளன் கீரிமலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்த ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள பிரதேசமும் ஆண்டொன்றிற்கு 10 ஆயிரம் டொலர்களுக்கு தனியார் பல்கலைக் கழகத்திற்கு குத்தகைக்கு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *