News

தகவல் அறிவதற்கான உரிமை – மக்கள் சக்திக்கு உயிர்

By In

அரச கடமை மற்றும் பொறுப்புக் கூறலுக்கு உதவுதல்: – ஊழலை ஒழித்து பிரசைகளை நல்லாட்சியை நோக்கி வழிநடத்துதல்

புரிந்துணர்வு, விமர்சனம் மற்றும் வாழ்த்துக்கள் என்பவற்றை கடந்து தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் ஒரு வருடத்தின் நிறைவை கடந்து நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது. தகவல் சட்டம் நிறைவேறிய ஒரு வருடத்தை நினைவு கூறும் சர்வதேச மாநாடு  “தகவல் அறியும் உரிமையால் உயிர் பெற்ற நாடு – ஒரு வருட மீளாய்வு” என்ற கருப்பொருளில் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இந்த சர்வதேச மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்களாக தகவல் அறியும் உரிமையும் மக்கள் அதிகாரமும் என்பன அமைகின்றன. உலகம் பூராவும் உள்ள மக்கள் தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தும் முறைபற்றி இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது.

சட்டத்தில் உள்ள சாதகங்கள், பாதகங்கள் பற்றி மட்டுமல்லாது இச்சட்டத்தால் அடையக் கூடிய வெற்றிகள், ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல் எழுப்புவதற்கான இயலுமையும் சக்தியும் உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் அவர்களது நாட்டின் அனுபவங்களை பகிந்து கொண்டனர். வெளிநாட்டு பிரதிநிதிகளின் கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும் போது கடந்த ஒரு வருட காலப்பகுதி இந்த சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் மேலும் மக்கள் இந்த சட்டத்தை பயன்படுத்துவது தொடர்பாக பங்கெடுப்பதற்காக ஊக்குவித்தல் அவசியம் என்ற விடயம் பிரதானமாக சுட்டிக்காட்டப்பட்டது.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன் இந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்துகையில் கூறியதாவது : – உள்நாட்டு வெளிநாட்டு காரணிகளை அடிப்படையாக வைத்து இந்த சட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் அது தொடர்பாக கையாள வேண்டிய வழிமுறைகளைப் பயன்படுத்தி செயலாற்றுதல் அவசியமாகின்றது.

“தகவல் அறியும் சட்டம் பற்றிய ஏனைய நாடுகளின் அனுபவங்களின் ஊடாக எமது நாட்டிலும் இந்த சட்டத்தை உயர்ந்த மட்டத்தில் பயன்படுத்தி உச்ச பிரதிபலனை அடைய முயற்சி எடுக்க வேண்டும்.

பிரசைகள் என்ற வகையில் இச்சட்டத்தை பயன்படுத்துவது தொடர்பாக அறிவு பெறுவது அவசியமாவதோடு அதற்கான நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் இந்த சட்டத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று தகவல் அறிவதற்கு பயன்படுத்தும் முறை தொடர்பாக அறிவூட்டல் செய்ய வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

இந்த சட்டம் தொடர்பாக அரசியல் யாப்பின் பிரிவில் சொல்லப்படடுள்ள விடயங்களுக்குள் பிரவேசிப்பதற்குரிய வாய்ப்பை தகவல் சட்டம் மேலும் இலகுபடுத்துவதாக அமைகின்றது. அரசாங்கம் பதவிக்கு வரும்போது வழங்கிய வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று என்றும் அவர் மேலும் தெரிவிக்கையில் கூறினார்.

தகவல் சட்டம் அரச சேவைக்குள் பொறுப்புக் கூறலையும் வெளிப்படைத்த தனமையும் உள்ள நிர்வாக செயற்பாட்டை ஊக்குவிப்பதோடு இந்த சட்டம் உண்மையாகவே ஊழல், மோசடிகளுக்கு எதிராக போராட பிரசைகளை ஊக்குவிப்பதாக அமைகின்றது என்றும் அவர் தெரிவித்தார். தகவல் அறிவதற்கான சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள எடுத்த முயற்சியானது 24 வருட கால நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். 1998 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த ஊடக சுதந்திரம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்துவது என்ற கொழும்பு பிரகடனத்தில் தெளிவாக அதுபற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இலங்கையில் உள்ள பிரதான ஐந்து ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட போராட்டமாக அந்த முயற்சி அமைகின்றது

கொழும்பு பிரகடனத்தின் 2.1 பிரிவுக்கமைய “இரகசியம் என்று பரந்த மற்றும் மறைமுகமாக என்ற அடிப்படையில் வரைவிளக்கணப் படுத்தப்பட்டுள்ள உத்தியோக இரகசிய சட்டத்தை இரத்து செய்து பதிலாக தகவல்களை அறிந்து கொள்வதற்கு உதவும் வகையிலான தகவல் அறிவதற்கான சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்” என்று அந்த பிரகடனத்தில் தொவிக்கப் பட்டிருக்கின்றது.

அத்துடன் ஊடகவியலாளர்களும் சிவில் சமூகமும் இந்த சட்டத்தை பலப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளை கைவிடக் கூடாது என்றும் நடேசன் தெரிவித்தார்.

இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜன் கஸ்டென்ட்சதா; குறிப்பிடுகையில் எந்தவொரு நாடாக இருந்தாலும் தகவல் அறிவதற்கான உரிமையும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரமும் பிரசைகளால் ஒன்றாக அனுபவிக்கக்கூடிய மகிழ்சி மற்றும் சுய திருப்தியை அடிப்படையாகக் கொண்ட விடயம் என்றார்.

தகவல் அறிவதற்கான சட்டமானது எந்தவொரு சமூகத்திலும் சனநாயக விழுமியங்களை மதிப்பதை வெளிப்படுத்துவதாக அமைவதோடு மனிதனின் இருப்பை பலப்படுத்தவதற்கான ஆயுதம் என்றும் அவர் கூறினார்.

ஒரு நாட்டில் தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்தி பெறுப்புக் கூறலையும் வெளிப்படைத் தன்மையையும் அடிப்படை சக்தியாக வெளிப்படுத்தும் பொறுப்பு சிவில் சமூகமும் ஊடகவியலாளர்களுமாவர். தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தல் மற்றும் தகவலை பெற்றுக்கொள்ளல் தொடர்பாக பொதுமக்களை அறிவூட்டும் பாரிய பொறுப்பும் அவர்களைச் சார்ந்ததாகும் என்றும் அவர் கூறினார்.

News

போலியான தகவல் வழங்கிய அஸ்வெசும பயனாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

க.பிரசன்னா கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக போலியான தகவல்களை வழங்கி தகுதியற்ற நபர்களும் அஸ்வெசும கொடுப்பனவை…

By In
News

 ரணில் விக்ரமசிங்கவின் ஓய்வூதியம்

– ஜனக சுரங்க இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர் என பல்வேறு…

By In
News

18 வருடங்களாக நிர்மாணிக்கப்படும் மெரைன் டிரைவ் வீதி

க. பிரசன்னா கொழும்பு – காலி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழி என அடையாளம் காணப்பட்ட கரையோர வீதியின் (மெரைன் டிரைவ்) ஆறு…

By In
News

நாடு பால் உற்பத்தியில் தன்னிறைவு காண்பது எப்போது?

மொஹமட் ஆஷிக் – தேவையில் 30.86 சதவீதம் மட்டுமே உள்ளூர் உற்பத்தி – 43.34 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது -2023 இல் பாலுற்பத்தி96 இலட்சம்லீற்றர் குறைவு ஐக்கிய…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *