தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி பொலன்நறுவை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் செய்யும் செயலமர்வு 2017 மார்ச் மாதம் 17 ஆம் திகதி பொலன்நறுவை ரோயல் நெஸ்ட்; ஹோட்டலில் நடைபெற்றது.
இங்கு பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. தகவல்களை அறிந்து கொள்வது மக்களது உரிமை என்ற அடிப்படையில் இச்சட்டத்தை பயன்படுத்தி உடனடி தகவல்களை மட்டுமல்லாது கடந்த 10 வருட கால பிற்பட்ட தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியுமாகின்றது. இந்த செயலமர்வில் பங்குபற்றிய இளம் ஊடகவியலாளர்களால் தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்தி பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட செய்திகள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்திருந்த இந்த பயிற்சி கருத்தரங்கில் தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் தொடர்பான விடயங்கள் பற்றிய கருத்துக்கள் பரிமாறப்பட்டன. கமல் லியனாரச்சி மற்றும் சட்டத்தரணி திருமதி ராதிகா குணரத்ன ஆகியோர் விரிவுரை நிகழ்த்தினர்.
Recent Comments