கொழும்பில் வசிப்பவர்கள் பலர் சமீபத்தில் தங்கள் வீட்டுக் குப்பை சேகரிக்கப்படாத பிரச்சினையை எதிர்கொண்டனர். எவ்வாறாயினும், இப்போது குப்பை சேகரிப்பு நகரத்தில் சேகரிப்பு அட்டவணைகளை பின்பற்றி மீண்டும் தொடங்கியிருக்க வேண்டும்.
தற்போதைய சேகரிப்பு முறை தொடங்கியதிலிருந்து குப்பை சேகரிப்பின் வழக்கமான தன்மை (regularity) ஓரளவு இல்லாததால், தலைநகரில் குப்பைகளை ஒட்டுமொத்தமாக கையாள்வது குறித்து மேலும் நன்கு புரிந்துகொள்ளும் பொருட்டு ஒரு தகவல் அறியும் உரிமை (RTI) விண்ணப்பம் கொழும்பு மாநகரசபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
கொழும்பு மாநகர சபையின் படி, கொழும்பு நகரத்திலிருந்து சராசரியாக தினசரி கழிவு உற்பத்தி 550 மெட்ரிக் தொன் (MT) ஆகும். முழு நாட்டிலும் ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யப்படுவதாகக் கூறப்படும் 7,000 மெட்ரிக் தொன் குப்பைகளுடன் ஒப்பிடும்போது இது ஒரு குறிப்பிடத்தக்க சதவீதமாகும்.
தகவலறியும் உரிமை விண்ணப்பத்திற்கு கொழும்பு மாநகர சபை அளித்த பதில், நகரம் உருவாக்கும் திண்மக்கழிவுகளில் கிட்டத்தட்ட 100% கொழும்பு மாநகர சபையினால் தினசரி சேகரிக்கப்படுகிறது.
சேதனக் கழிவுகள், மீள்சுழற்சி செய்ய முடியாத கழிவுகள் மற்றும் மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் என மூன்று கழிவு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர் என்றும் கொழும்பு மாநகர சபை விளக்கியது.
சேதன கழிவுகள் தொடக்கத்தில் கெரவலப்பிட்டியவிற்கு (Kerawalapitiya) உரம் தயாரிப்பதற்காக அனுப்பப்பட்டன. ஆனால், இந்த உரம் தயாரிப்பு தளம் (compost yard) புதுப்பித்தல் நோக்கங்களுக்காக ஆகஸ்ட் 3, 2019 முதல் மூடப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் திகதி முதல் சேகரிக்கப்பட்ட சேதனக் கழிவுகள் அருவக்கலுவில் (Aruwakkalu) உள்ள நிலப்பகுதிக்கு (landfill) அனுப்பப்படுகின்றன.
மீள்சுழற்சி செய்ய முடியாத கழிவுகள் அருவக்கலுவிற்கு அனுப்பப்படுகின்றன. அதே நேரத்தில் காகிதம், அட்டை, கண்ணாடி போத்தல் போன்ற கழிவுகள் (அதாவது மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவுகள்) மீள்சுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன.
தொழில்நுட்பக் கழிவுகளாகத் தகுதிபெறும் கழிவுகள் பதிவு செய்யப்பட்ட மீள்சுழற்சியாளரினால் கழிவு சந்தையான ‘கசல பொல’ (‘Kasala Pola’) வில் மட்டுமே சேகரிக்கப்படுகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.
குறிப்பாக நகரத்தில் உள்ள குடியிருப்பாளர்கள் (residents) மற்றும் வணிக நிலையங்கள் (businesses), கழிவு உருவாக்கத்தை குறைக்க முயற்சிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது நீண்ட காலமாக தெளிவாகியுள்ளது. இருப்பினும், அதே நேரத்தில், கொழும்பு மாநகரசபை போன்ற அமைப்புகளின் முறையான சேவைகள் திண்மக்கழிவுகளை சரியான முறையில் கையாள்வதற்கு இன்றியமையாதவை என்பதும் தெளிவாகியுள்ளது.
Recent Comments