News

கல்மெடியாவ குளத்தில் நீர் ஒழுக்கை திருத்தம் செய்தல்

By In

(மங்களநாத் லியனாரச்சி – திருகோணமலை)
முன்னொரு காலத்தில் குளம் என்று அழைக்கப்பட்ட திருகோணமலை கல்மெடியாவ குளம் 450 ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீரைபாய்ச்சி பாசன வசதியை வழங்கியதோடு அதன் மூலம் தங்கி வாழும் விவசாயிகளது எண்ணிக்கை 300 குடும்பங்கள் அளவிலாகும். நீண்ட காலமாக கல்மெடியாவ குளத்தில் காணப்படும் ஒரு ஓட்டை காரணமாக நீர் வெளியேறுவதால் விவசாயிகளுக்கு போதுமான நீர் கிடைக்காததால் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நீh; வெளியேறும் ஒழுக்கிற்கு ஒரு தீர்வை காணும் நோக்கில் மாகண நீர்ப்பாசனத் திணைக்களம் 10.387 மில்லியன் (1038 கோடி 70 இலட்சம்) ரூபாய்களை கடந்த மே மாதம் அளவில் ஒதுக்கீடு செய்திருக்கின்றது. உள்நாட்டு போர் நடைபெற்ற வடக்கு கிழக்கின் அதிகமான பகுதிகளில் இராணுவத்தின் பொறியியல் திணைக்களம் ஊடாகவே இவ்வாறான அதிகமான அபிவிருத்தி நடைவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவது பொதுவான நடவடிக்கையாகும். இலாபம் உழைப்பதை குறிக்கோளாகக் கொள்ளலாமல் உரிய காலத்திற்கு திட்டங்களை நிறைவு செய்வதன் மூலம் உச்ச பயன் அடைவது இவ்வாறான நடவடிக்கைகளின் நோக்கமாகும்.
குளத்தில் ஏற்பட்டுள்ள நீர் ஒழுக்கையும் இராணுவ பொறியியல் பிரிவின் ஊடாக திருத்தியமைக்கும் படி மாகாண பொறியியல் பிரிவின் அதிகாரிகளுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்திருந்த போதும் இராணுவ பொறியில் பாரிவு அதற்கு தேவையான அனுபவத்தை பெறற்வர்களாக இல்லை என்ற காரணத்தால் பொறியியல்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். அதே நேரம் அந்த சந்தர்ப்பத்தில் இராணுவ பொறியியல் பிரிவு குறிப்பிட்ட பழுதை 43 இலட்சம் ரூபா செலவில் திருத்தி அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்ததாக விவசாயி ஒருவர் கூறினார்.
எவ்வாறாயினும் விவசாயிகள் அமைப்புக்களின் இணக்கத்துடன் இந்த பழுது பார்த்தல் வேலையை எம்.ரி.ஏ. நிர்மாண கம்பனிக்கு இரண்டு மாத கால அவகாசத்தில் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்யும் மழை நீர் இந்த குளத்தில் இருந்தே பாசன வசதிக்காக விடப்படுவதால் அந்த சந்தர்ப்பத்தை இழக்க நேரிட்டால் அடுத்ததாக வரும் இரண்டு போகங்களின் நெற்செய்கை நாசமடைந்து பாரிய இழப்புக்களை விவசாயிகள் சந்திக்க நேரிடும் என்ற காரணத்தால் குளத்தின் திருத்த வேலைகள் பற்றிய தகவல்களை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குளத்தை பழுது பார்ப்பதற்காக பொறுப்பேற்ற நிறுவனம் குளத்தில் இருந்த நீரை வெளியேற்றியதோடு உரிய முறையில் பழுது பார்க்கும் வேலையை செய்யாமல் நழுவும் நிலையை அவதானிக்க முடிந்ததால் அது தொடர்பாக தகவல் அறிவதற்கான சட்டத்தின் அடிப்படையில் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்திடம் தகவல் கோரப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் பொருத்தப் பட்டிருந்த பழைய நீர்க் குழாயை முழுமையாக அப்புறப் படுத்துவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் கூறியிருந்தாலும் பழுது பார்க்கும் வேலையை செய்த பொறியியல் ஒப்பந்த நிறுவனம் அதன் அரைவாசியை மாத்திரமே அப்புறப்படுத்துவதாக தெரிவித்திருந்தது. தகவல் அறிவதற்கான சட்டத்தின் அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவலின் அடிப்படையில் விவசாயிகளது தலையீடு காரணமாக குறித்த பழுது பார்க்கும் நிறுவனத்திற்கு உரிய குழாயை 88 அடி நீளம் வரையில் விஸ்தரித்து பழுது பார்க்கும் நிலை ஏற்பட்டது.
அவ்வாறே குழாயின் மேற்பகுதியை கொங்கிரிட் பண்ண வேண்டி இருந்த போதும் விவசாயிகள் அது தொடர்பாக வினா எழுப்பியபோது நிறுவனம் கூறியிருந்த விடயம் அதற்கான திட்டம் இல்லை என்பதையாகும். ஆனாலும் தகவல் அறியும் திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தகவலில் மேற்பரப்பை கொங்கிரிட் இடுவதற்கு பழுது பார்க்கும் நிறுவனம் நீர்ப்பாசனத் திணைக்களத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது என்ற உண்மை வெளிப்பட்டிருந்தது.
மகாண பொறியில் திணைக்களம் மற்றும் சில விவசாய சங்கங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து இந்த விடயத்தில் செய்து வந்த ஊழல் மற்றும் மோசடிகளை விவசாயிகள் தகவல் அறிவதற்கான சட்டத்தின் அடிப்படையில் பெற்றுக்கொண்ட தகவல்களை அடிப்பயைடாக வைத்து உரிய பழுது பார்க்கும் நிறுவனத்தை தொடர்ந்து நிர்ப்பந்தித்து வந்ததால் குளத்தை பழுது பார்க்கும் வேலையை திறம்பட செய்ய வேண்டிய நிர்ப்ந்த நிலை ஏற்பட்டது. குறித்த பணியை முழுமையாகவும் ஒப்பந்தத்தில் பொருந்திக்கொண்ட அடிப்படையிலும் செய்து முடிக்க வேண்டி ஏற்பட்டதால் தமது கம்பனிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஒப்பந்தக் கம்பனி கூறி வருகின்றது.
தகவல் அறிவதற்கான சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தகவலின்படி அணைக்கட்டை 80 ம் வெளியில் இருந்து கொண்டு வரப்படுகின்ற மண் மூலமே நிரப்ப வேண்டி இருந்தது. ஆனாலும் ஒப்பந்தக்கார கம்பனி குளக்கட்டை அப்புறப்படுத்தும் மண்ணெய் அப்படியே வெளியேறாமல் குளத்திற்குள் ஒதுக்கமாக வைத்திருந்தது வெளியில் இருந்து மண் கொண்டு வருவதற்கான செலவை மீதப்படுத்தவதற்காகும் என்ற உண்மை வெளிப்பட்டது. அத்துடன் அந்த மண் உரிய இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டிய மண் என்ற விடயமும் தகவல்கள் ஊடாக வெளிப்பட்டது. அதனால் வெளியில் இருந்து மண் கொண்டு வருவதற்கும் குளத்தில் ஏற்கனவே அப்புறப்படுத்த வேண்டிய மண்ணெய் வெளியேற்ற வேண்டிய தேவையும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களாகும்.
அத்துடன் அப்புறப்படுத்தப்பட வேண்டிய நிலையில் குவிக்கப்பட்டிருந்த மண் அhpப்புக் குள்ளாகிய நிலையில் மீண்டும் குளத்திற்குள் நிறைந்து இருப்பதற்கும் உரிய நீர்ப்பாசன பொறியில் திணைக்கள அதிகாரிகளும் விவசாய சங்கங்களுமே பொறுப்புக் கூற வேண்டும் என்பது விவசாயிகளது நம்பிக்கையாகும்.
முறையாக ஒப்பந்தம் செய்து ஆரம்பிக்கப்படும் இவ்வாறான அபிவிருத்தி திட்டங்கள் அப்பாவி விவசாயிகளது இயலாமை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் கையாடல்கள் மற்றும் ஊழல்களை செய்து பொது நிதியை சூரையாடும் நிலை காணப்படுகின்றது. உரிய முறையில் கவனம் செலுத்தப்படாவிட்டால் ஊழல்கள் மோசடிகள் காரணமாக திட்டம் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படுவதில்லை. அத்தகைய நிலைமைகளில் இருந்து பாதுகாப்பதற்கு தகவல் அறிவதற்கான சட்டம் முழுமையாக உதவி செய்வதாக விவசாயிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

News

20 அரச நிறுவனங்களின் மூலம் அரசாங்கத்துக்கு 85 ஆயிரம் கோடி ரூபா இழப்பு!

க.பிரசன்னா நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மறுபுறம் அரசுக்கு அதிக செலவை…

By In
News

2025 மார்ச் முதல்முழுமையாக அமுலுக்கு வரும் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம்

ஜனக சுரங்க தனிப்பட்ட தரவின் செயலாக்கத்தை ஒழுங்குபடுத்துதல், தனிப்பட்ட தரவைப் பாதுகாத்தல், தரவு பங்களிப்பாளர்களின் உரிமைகளை அடையாளம் கண்டு வலுப்படுத்துதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு, இலங்கை பிரஜைகளுக்கு…

By In
News

ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதை உறுதிப்படுத்தும் பாராளுமன்ற தரவுகள்!

தனுஷ்கசில்வா ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களின் ஒரு தசாப்தகால வரலாற்றை இலங்கை நாடாளுமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது. 2006 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஊடகவியலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அபாயகரமான…

By In
News

எல்லைகள் வரையறுக்கப்படாது தனியார் பல்கலைக்கழகத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கீரிமலை ஜனாதிபதி மாளிகை!

ந.லோகதயாளன் கீரிமலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்த ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள பிரதேசமும் ஆண்டொன்றிற்கு 10 ஆயிரம் டொலர்களுக்கு தனியார் பல்கலைக் கழகத்திற்கு குத்தகைக்கு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *