News

எல்லைகள் வரையறுக்கப்படாது தனியார் பல்கலைக்கழகத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கீரிமலை ஜனாதிபதி மாளிகை!

By In

ந.லோகதயாளன்

கீரிமலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்த ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள பிரதேசமும் ஆண்டொன்றிற்கு 10 ஆயிரம் டொலர்களுக்கு தனியார் பல்கலைக் கழகத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

கீரிமலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை ‘நொதேன் யுனி’ (NorthernUni) என்னும் தனியார் பல்கலைக் கழகத்திற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.  

அந்தக் குத்தகை ஒப்பந்தத்தின் பிரதியைக் கோரி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தபோது, முதலில் ஒப்பந்த பிரதியை வழங்க நகர அபிவருத்தி அதிகார சபையினர் மறுத்திருந்தனர். இதனால் ஒப்பந்த பிரதியைக்கோரி தகவல் அறியும் ஆணைக் குழுவிடம் மேன் முறையீடு செய்யப்பட்டது. மேன் முறையீட்டை ஏற்ற தகவல் அறியும் ஆணைக்குழு விசாரணையை முன்னெடுத்தது. இதன்பிரகாரம் இதற்கான எழுத்து மூல பதிலை வழங்குமாறு தகவல் அறியும் ஆணைக்குழு நகர அபிவருத்தி அதிகார சபையை வேண்டியிருந்தது. 

இக் காலப்பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் ‘நொதேன் யுனி’ என்னும் தனியார் பல்கலைக் கழகத்துடன் மேற்கொற்கொண்ட ஒப்பந்தத்தின் பிரதி கட்டுரையாளருக்கு வழங்கப்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைவாக, 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு மேற்கொண்ட ஒப்பந்தப் பிரதியில் கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்காக நொதேன் யுனி நிறுவனம் ஆண்டு ஒன்றிற்கு 10 ஆயிரம் டொலர்களை நகர அபிவிருத்தி அதிகார சபையினருக்கு குத்தகைப் பணமாக வழங்க வேண்டும். 

இந்த ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டிற்கு 10 ஆயிரம் டொலர்கள் வழங்கும் அதேநேரம் அடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டும் 0.5 வீதம் என்ற வகையில் வாடகைப் பணம் அதிகரிக்கப்படும். 

அமைவிடத்தின் மாதிரி வரைபடம் ஒப்பந்தத்தோடு இணைக்கப்பட்டுள்ள போதிலும் வரைபடத்திலோ அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தத்திலோ எந்த இடத்திலும் நிலத்தின் அளவீடு குறிப்பிடப்படவில்லை.

ஒப்பந்தத்தின் 6.8 ஆவது சரத்திற்கு அமைய ஒப்பந்தம் எழுதப்பட்டு 180 நாட்களுக்;குள் நிலம் கையகப்படுத்தல் தொடர்பான மீதமுள்ள பணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபை முடிக்க வேண்டும், அவ்வாறு பணி நிறைவுறாத சந்தர்ப்பத்தில் மேலும் மூன்று மாத கால அவகாசத்தில் காணி கையகப்படுத்தல் பணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபை நிறைவு செய்திருக்க வேண்டும் என்பதோடு இந்த இடத்திற்கு முழுமையான மதிப்பீடு செய்யப்படவில்லை என்ற முரணான தகவலும் இணைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தத்திற்கு இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உடன்பட்டதாகவும் இந்த ஒப்பந்தத்தில் இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும்; ஒரு நிதி பங்குதாரர் எனக் குறிப்பிட்டுள்ளதோடு ‘ஓ’ எனும் பந்தியில்  2023-08-23 இல் வலி.வடக்கு பிரதேச செயலாளர் இந்த ஒப்பந்தத்திற்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை என்று ஒப்புதல் வழங்கியுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஒப்பந்தத்தின் சரத்து 5-3 இல் இந்த இடத்தை ஏதேனும் காரணத்தினால் நொதேன் யுனி நிறுவனத்திற்கு கொடுக்க முடியாவிட்டால் ஒப்பந்தக்காரரின் பணத்தை மீள வழங்க வேண்டும் எனவும் 5.6 சரத்தில் பெறுமதி கணிப்பு செய்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டாலும் அதன் பெறுமதி எங்குமே குறிப்பிடப்படவில்லை என்பதுடன் பகுதி 6.9 இல் கணிக்கப்பட்ட பெறுமதியில் முதலீட்டாளருக்கு கிடைத்த பணம் நில உரிமையாளருக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இவ்வாறு ஒன்றோடு ஒன்று தொடர்புபடாது, பூரணத்துவமற்ற ஒப்பந்தமாகவே  கீரிமலை ஜனாதிபதி மாளிகையை தனியார் பல்கலைக்கழகத்துக்கு வழங்கும் ஒப்பந்தம் காணப்படுகின்றமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற ஆவணத்தினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

News

20 அரச நிறுவனங்களின் மூலம் அரசாங்கத்துக்கு 85 ஆயிரம் கோடி ரூபா இழப்பு!

க.பிரசன்னா நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மறுபுறம் அரசுக்கு அதிக செலவை…

By In
News

2025 மார்ச் முதல்முழுமையாக அமுலுக்கு வரும் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம்

ஜனக சுரங்க தனிப்பட்ட தரவின் செயலாக்கத்தை ஒழுங்குபடுத்துதல், தனிப்பட்ட தரவைப் பாதுகாத்தல், தரவு பங்களிப்பாளர்களின் உரிமைகளை அடையாளம் கண்டு வலுப்படுத்துதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு, இலங்கை பிரஜைகளுக்கு…

By In
News

ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதை உறுதிப்படுத்தும் பாராளுமன்ற தரவுகள்!

தனுஷ்கசில்வா ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களின் ஒரு தசாப்தகால வரலாற்றை இலங்கை நாடாளுமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது. 2006 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஊடகவியலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அபாயகரமான…

By In
News

யானை – மனித முரண்பாடும் அதிகரிக்கும் உயிரிழப்புக்களும் !

வீ.பிரியதர்சன் உலகில் வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான முரண்பாடுகள் மனித நாகரிகம் தோன்றிய காலம் முதல் தொடர்கதையாகி வருகின்றன. இதில் முக்கியமாக யானை – மனித முரண்பாட்டைக் குறிப்பிடலாம். இலங்கையில்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *