இந்த வருடத்தின் ஆரம்பத்தில் சில மாதங்களாக நாட்டின் பல பகுதிகளில் மின்சார நெருக்கடிக்கு மக்கள் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நெருக்கடியை சமாளிக்கும் வகையில் நாட்டின் அனேகமான பிரதேசங்களுக்கு மினசார விநியோகம் மட்டுப் படுத்தப்பட வேண்டிய நிலை உருவாகியது. அதனால் நாட்டில் மக்களது அன்றாட வாழ்க்கைக்கு பாhpய நெருக்கடி ஏற்பட்டதோடு உற்பத்தித் துறைக்கும் இதனால் பாhpய நெருக்கடி ஏற்பட்டது எனலாம். இலங்கை போன்ற சிறிய அளவிலான மின்சார விநியோக திட்டங்களைக் கொண்டுள்ள நாடொன்றில் கிடைக்கின்ற மின்சாரத்தை சரியான முறையில் பயன்படுத்துவதற்கும் புதிய மின்சார விநியோக திட்டங்களை ஆரம்பிப்பதற்கும் சரியான முகாமைத்துவம் அவசியமாகின்றது. அத்துடன் சரியான முகாமைத்துவத்துடன் தெளிவான திட்டமும் பராமரிப்பும் தேவைப்படுகின்றது. இந்த வருடம் ஏற்பட்ட மிசார நெருக்கடிக்கு அடிப்படையாக அமைந்த காரணிகள் அவ்வாறே எதிர்வரும் வருடங்களிலும் தொடரலாம் என்ற அடிப்படையில் ஆட்சியில் உள்ள அரசாங்கம் என்ற வகையில் சரியான திட்டங்களை ஆரம்பித்தலும் உரிய முறையில் அமுல்படுத்தலும் அவசியமாகின்றது.
எதிர்காலத்தில் ஏற்படலாம் என்று கருதக்கூடிய மின்சார நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள திட்டங்கள், நடைமுறைப் படுத்துவதற்கு உத்தேசித்துள்ள நடவடிக்கைகள் யாவை என்பது தொடர்பாக தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்தி அதுபற்றிய தகவல்களை கோரி விண்ணப்பபப் படிவம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை மின்சார சபையால் அந்த தகவல் கோரிக்கைக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ள தகவல்களில் எதிர்காலத்தில் அமுல்படுத்த திட்டமிட்டுள்ள மற்றும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டிருக்கின்றது. இந்த திட்டங்கள் மற்றும் உபாய வழிமுறைகள் ஊடாக மின்சார நெருக்கடிக்கு தீர்வை காண அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது.
இலங்கை மின்சார சபையால் திட்டமிடப்பட்டுள்ள 2018 – 2037 ஆம் ஆண்டு காலப் பகுதிக்கான நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு துவங்கும் போது 300 மெகா வொட் (300 ஆறு) காற்றாடி மூலமான மின்சார உற்பத்தி திட்டம் மற்றும் 320 மெ.வொட் அணல் மின் உற்பத்தி ஆகியவற்றை இணைத்து மின்சாரத்தை பெறும் திட்டத்தை வகுத்திருக்கின்றது. ஆனாலும் அந்த திட்டங்களை நிறைவு செய்யும் பணிகள் தாமதம் அடைந்திருக்கின்றது. அதனால் இந்த திட்டங்களை மிக அவசரமாக ஆரம்பித்து தேசிய மின் விநியோக திட்டத்திற்குள் மின்சாரத்தை இணைப்பது ஒரு திட்டமாகும். மேலே சொல்லப்பட்ட திட்டத்தை உரிய காலத்தில் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் போன போதும் 170 மெ.வொட் வலு கொண்ட மின்சாரத்தை ACE அம்பிலிபிடிய, ACE மாத்தறை மற்றும் ஆசியா பவர் (Asia Power) ஆகிய இடங்களில் அணல் மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை விஸ்தரிப்பது என்ற திட்டம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் அதற்கு மேலதிகமாக 100 மெ.வோட் மின்சார உற்பத்தி போட்டிச் சந்தை விலைமனு கோரல் மூலம் பெறப்பட்டிருக்கின்றது.
2018 – 2037 ஆம் ஆண்டு கால நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ள மின்சார உற்பத்தி திட்டங்களில் வரட்சியான கலநிலை காணப்படுகின்ற போதும் உரிய திட்டத்தின் அடிப்படையில் புதிய மின் உற்பத்தி நிலையங்களை நிh;மாணிப்பதில் ஏற்பட்டுள்ள கால தாமதம் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாததால் ஏற்படுகின்ற மின் விநியோக தடை போன்ற நிலைமைகளில் 150 ஆறு தேவைப்படுவதாக கணிப்பிடப் பட்டிருக்கின்றது. அந்த 150 மெ. வொட் மின்சாரத்தையும் உட்படுத்தி 2019 ஆம் ஆண்டில் 470 மெ.வொட். மின்சாரம் தேவை என்பது கண்டறியப்பட்டிருக்கின்றது. அதில் 270 மெ.வொ. மின்சாரம் ஏற்கனவே உள்வாங்கப் பட்டிருக்கின்றது. இதற்கு மேலதிகமாக மேலும் 200 மெ.வொட் மின்சாரம் 2019 ஆம் ஆண்டில் பெற்றுக் கொள்ளப்பட வேண்டி இருப்ப தாகவும் இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.
இவ்வாறு பார்க்கின்ற போது மின்சார நெருக்கடி நிலைமை ஒன்று ஏற்படுகின்ற போது குறுகிய கால மற்றும் தற்காலிக நடவடிக்கையாக மின்சாரத்தை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளுக்கு கூடுதலான கவனம் செலுத்தப்பட்டிருப்பதோடு முன்னோக்கிய 5 – 10 வருட காலப் பகுதிக்குள் முகம் கொடுக்க நேரிடுகின்ற மின்சார தட்டுப்பாடு மற்றும் மின் விநியோகத்தில் ஏன்படப் போகின்ற நெருக்கடி நிலையை சமாளிப்பதற்காக நீண்ட கால திட்டங்கள் எதுவும் ஆரம்பிக்கப் படவில்லை என்பது தெளிவாகின்றது.
10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!
ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில் பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…
போதையில் மூழ்கும் சமூகம்; அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்
2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…
பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ
ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…
ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!
● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….
Recent Comments