தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிக் கொணரப்பட்ட தரவுகள்
முகமது ஆசிக்
குடித்தொகை வளர்ச்சி பற்றிய தகவல் மற்றும் தரவுகளை குடித்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில் இருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். தற்போது கிடைக்கப்பெறும் தகவல்கள் 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புடன் தொடர்புடையதுடன் தரவுகளைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் வலுவாக உணரப்படுகின்றது. துல்லியமான தரவு கிடைக்காமை பல துறைகளுடன் தொடர்புடைய போக்குகளை அறிவதற்கு ஒரு தடையாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பிறப்பு மற்றும் இறப்புகளில் பிரதிபலித்த விசேட அம்சங்கள் யாவை? இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமான இந்த அம்சம் குறித்த தேடலின் முடிவாகும்.
கடந்த ஐந்து வருடங்களில் இலங்கையில் பிறப்பு வீதம் பாரியளவில் குறைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
1871 முதல் 1963 வரையிலான காலகட்டத்தில் சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட வருடாந்த சனத்தொகை கணக்கெடுப்பில், சனத்தொகை வளர்ச்சி விகிதம் படிப்படியாகக் குறைவடைந்து, 1963க்குப் பிறகு 1.2 ஆகக் குறைவடைந்தது. மேலும் தற்போதுள்ள எண்ணிக்கை அதனிலும் பார்க்க சிறியளவில் அதிகமாக/குறைவாக உள்ளது.
2019 முதல் 2023 வரையிலான இலங்கையின் பிறப்பு மற்றும் இறப்புகள் குறித்து விசாரிப்பதற்காக 2016 இன் 12ம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டமூலத்தின் கீழ் பதிவாளர் நாயக திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட தகவல்கள், 2019 முதல் 2023 வரையிலான ஐந்தாண்டு காலப்பகுதியில் இலங்கையில் பிறப்புகளின் எண்ணிக்கை 14,30,785 ஆக காணப்பட்டமையை வெளிப்படுத்துகிறது. அதே காலகட்டத்தில் 6,26,9090 இறப்புகள் பதிவாகியுள்ளன. எவ்வாறாயினும், 2019 உடன் ஒப்பிடும்போது 2023 இல் பிறப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதாவது 71,110 ஆல் குறைந்துள்ளதுடன் அதே காலகட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 34,842 ஆல் அதிகரித்துள்ளது.
பதிவாளர் நாயக திணைக்களத்தின் தகவல் அதிகாரியான திரு.ஏ.எம்.ஆர்.எஸ்.பி.அமரகோன் வழங்கிய தகவலின் பிரகாரம், 2019 இல் 3,19,010 பிறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 2020 இல் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை 3,01,706 ஆகும். எனவே அந்த ஆண்டில் பிறப்புகளில் 17,304 ஆல் குறைவடைந்துள்ளது. 2021 இல் பிறப்புகளின் எண்ணிக்கை 2,84,848 ஆக இருந்ததுடன், இது முந்தைய ஆண்டை விட 16,858 ஆல் குறைவடைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 2,75,321 ஆக இருந்ததுடன், அந்த ஆண்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 9,527 ஆல் குறைவடைந்துள்ளது. 2023 இல் இலங்கையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 2,48,900 ஆக இருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 27,421 பிறப்புகளால் குறைவடைந்துள்ளது.
2019 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு பிறப்புகள் 71,110 ஆல் குறைவடைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் வழங்கிய தரவுகள் தெரிவிக்கின்றன.
அந்த ஐந்தாண்டுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது அதிகரிப்பு/குறைவு பற்றிய தரவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டு | இறப்புகளின் எண்ணிக்கை | முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போதான அதிகரிப்பு/குறைவு |
2019 | 1,46,397 | |
2020 | 1,32,431 | 13,966 அதிகரிப்பு |
2021 | 1,63,936 | 31,305 அதிகரிப்பு |
2022 | 1,79,792 | 15,856 அதிகரிப்பு |
2023 | 1,81,239 | 1,447 அதிகரிப்பு |
எவ்வாறாயினும், 2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கையில் இறப்பு விகிதம் குறைவடைந்து வருவதை இந்தத் தரவுகளிலிருந்து அவதானிக்கலாம். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இறப்பு விகிதத்தில் ஏற்பட்ட அசாதாரண வளர்ச்சியானது கொவிட் பெருந்தொற்றின் நேரடி தாக்கமாக கருதப்படலாம்.
இலங்கையில் பிறப்பு மற்றும் இறப்புகளை பகுப்பாய்வு செய்யும் போது, மாவட்ட ரீதியாக ஏற்றத் தாழ்வு வேறுபாடுகள் தெளிவாகக் காணப்படுகின்றன.
மாவட்டம் | பிறப்புகள்/இறப்புகள் | 2019 | 2023 | வேறுபாடு |
கொழும்பு | பிறப்புகள் | 48,901 | 39,634 | 9,262 |
இறப்புகள் | 24,321 | 26,451 | 2,441 | |
கம்பஹா | பிறப்புகள் | 21,585 | 17,501 | 4,084 |
இறப்புகள் | 14,765 | 18,492 | 3,727 | |
களுத்துறை | பிறப்புகள் | 12,503 | 8,904 | 3,599 |
இறப்புகள் | 8,443 | 10,941 | 2,498 | |
கண்டி | பிறப்புகள் | 25,857 | 18,328 | 7,529 |
இறப்புகள் | 11,576 | 14,111 | 2,535 | |
மாத்தளை | பிறப்புகள் | 7,855 | 5,673 | 2,182 |
இறப்புகள் | 3,433 | 4,604 | 1,171 | |
நுவரெலியா | பிறப்புகள் | 7,540 | 7,258 | 282 |
இறப்புகள் | 4,258 | 5,705 | 1,447 | |
காலி | பிறப்புகள் | 18,548 | 14,404 | 1,667 |
இறப்புகள் | 9,336 | 11,033 | 1,667 | |
மாத்தறை | பிறப்புகள் | 1,061 | 8,062 | 2,579 |
இறப்புகள் | 5,633 | 7,723 | 1,901 | |
ஹம்பாந்தோட்டை | பிறப்புகள் | 9,624 | 7,723 | 1,901 |
இறப்புகள் | 3,362 | 4,611 | 1,249 | |
யாழ் | பிறப்புகள் | 9,332 | 8,250 | 1,082 |
இறப்புகள் | 4,919 | 5,824 | 905 | |
கிளிநொச்சி | பிறப்புகள் | 2,953 | 3,204 | 253 |
இறப்புகள் | 590 | 804 | 214 | |
மன்னார் | பிறப்புகள் | 1811 | 1,888 | 77 |
இறப்புகள் | 528 | 662 | 134 | |
வவுனியா | பிறப்புகள் | 3,363 | 3,750 | 390 |
இறப்புகள் | 968 | 1,244 | 276 | |
முல்லைத்தீவு | பிறப்புகள் | 619 | 924 | 305 |
இறப்புகள் | 463 | 566 | 83 | |
மட்டக்களப்பு | பிறப்புகள் | 10,158 | 9,044 | 1,114 |
இறப்புகள் | 2,8,11475 | 3,644 | 769 | |
அம்பாறை | பிறப்புகள் | 14,769 | 11,292 | 3,477 |
இறப்புகள் | 3,666 | 4,523 | 1,157 | |
திருகோணமலை | பிறப்புகள் | 8,779 | 7,192 | 1,587 |
இறப்புகள் | 1,937 | 2,428 | 491 | |
குருநாகல் | பிறப்புகள் | 22,754 | 16,998 | 5,756 |
இறப்புகள் | 1,201 | 15,090 | 3,079 | |
புத்தளம் | பிறப்புகள் | 13,033 | 10,921 | 2,112 |
இறப்புகள் | 4,578 | 5,964 | 1,386 | |
அனுராதபுரம் | பிறப்புகள் | 14,846 | 9,178 | 5,668 |
இறப்புகள் | 5,661 | 6,925 | 1,261 | |
பொலன்னறுவை | பிறப்புகள் | 7,019 | 5,036 | 1,983 |
இறப்புகள் | 2,655 | 3,391 | 736 | |
பதுளை | பிறப்புகள் | 14,244 | 11,460 | 2,784 |
இறப்புகள் | 5,656 | 7,430 | 1,772 | |
கேகாலை | பிறப்புகள் | 8,873 | 7,377 | 1,496 |
இறப்புகள் | 5,608 | 7,515 | 1,907 | |
இரத்தினபுரி | பிறப்புகள் | 17,424 | 10,948 | 6,476 |
இறப்புகள் | 7,261 | 9,729 | 2,468 |
மேற்குறிப்பிட்ட அட்டவணையை ஆராயும் போது, பிறப்புகளின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக குறைவடைந்துள்ள போதிலும் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் போன்ற சில மாவட்டங்களில் பிறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் குறைந்துள்ளது. இருப்பினும், அனைத்து மாவட்டங்களிலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பை பிரதிபலிக்கின்றது.
ஆண்டுதோறும் பிறப்பு குறைவடைவதற்கும் இறப்பு அதிகரிப்பதற்கும் தனியான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
Recent Comments