க.பிரசன்னா
நாட்டில் 2016 – 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் 31,810 முறைப்பாடுகளும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் 45,404 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் கீழ் இயங்கும் பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களிலேயே இந்த புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் 2016 – 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிராக 31,810 குற்றச்சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 142 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 56 சிறுவர்களுக்கு எதிராக கொலை முயற்சிகள் பதிவாகியுள்ளன. 228 சிறுவர்களுக்கு கடுங்காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் 7758 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் 4471 சிறுவர்கள் தமது நெருங்கிய உறவினர்களினாலேயே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டில் 2016 – 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் பெண்களுக்கு எதிராக 45,404 வன்முறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 499 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 81 பெண்கள் மீது கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன.
1401 பெண்களுக்கு கடுங்காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் 14,023 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
Recent Comments