News

அரச நிறுவனங்களில் தமிழ் பிரதிநிதித்துவ குறைபாடு

By In

ஹல்துமுல்லை பிரதேச செயலக அலுவலகத்தில் தமிழ் பேசக்கூடிய அதிகாரிகள் குறைவாக இருப்பதால் சாந்தன் என்ற அப்பிரதேசவாசி பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியேற்பட்டது. தமிழர்களையும் முஸ்லிம்களையும் சனத்தொகையாக உள்ளடக் கிய அதிகமான தமிழ் பேசும் மக்களை கொண்ட பிரதேசமாக ஹல்து முல்லை இருந்து வருகின்றது.
அரசாங்க அலுவலகமான இதுபோன்ற ஒரு இடத்தில் சிறுபான்மை இனங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வாக உரிய தமிழ் பேசக்கூடிய ஊழியர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றது என்பது சாந்தனின் மனதில் எழும் கேள்வியாகும். ஆங்கிலம் இணை மொழியாகவும் சிங்களமும் தமிழும் அரசகரும மொழியாகவும் இருக்க வேண்டும் என்ற அரச கொள்கையை மீறும் செயலாக இந்த தமிழ் பேசும் ஊழியர்களுக்கான பற்றாக்குறை இருந்து வருகின்றது. அரச கொள்கையை பின்பற்ற கடமைப்பட்டுள்ள எல்லா அரச நிறுவனங்களும் இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
குறைவான ஊழியர் படை, அரச அலுவலகங்களில் சிங்கள மேலதிக்க நிலை என்பன போன்ற காரணிகள் அரசியல் அமைப்பால் உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ள அரச கொள்கையை பின்பற்றுவதில் உதாசீனப் போக்கை வெளிப்படுத்தவதாக இருக்கின்றது. எவ்வாறானாலும் சிறுபான்மையினர் வாழும் பிரதேசங்களில் அவர்களின் தேவைகளை ஈடுசெய்யும் வகையில் அரச கொள்கைக்கு ஏற்ப அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பது அரசாங்கம் மூலம் மக்கள் எதிர்பார்க்கப்படும் தேவையாகும்.
இந்த தகவல் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் (ருளுயுஐனு) இணைந்து தகவல் மற்றும் தொடர்பாடல் (ளுனுபுயுP) தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய சாந்தன் தமிழ் பேசக்கூடிய அதிகாரிகளின் குறைபாட்டிற்கு அது தொடர்பாக மக்கள் கேள்வி எழுப்பாததே என்பதை உணர்ந்துகொண்டார்.

2018 ஆம் ஆண்டு ஒக்டோபரில் சாந்தன் இது தொடர்பாக கேள்வி எழுப்பும் வகையில் தகவல்களை கோரி தகவல் அறிவதற்கான சட்டத்தின் அடிப்படையில் விண்ணப்பப் படிவம் ஒன்றை சாந்தன் ஹல்துமுல்லை பிரதேச செயலகத்தில் ஒப்படைத்தார். அவருக்கு பின்வரும் வினாக்களுக்கு விடை அவசியம் என்பதை அந்த படிவத்தில் தெரிவித்திருந்தார்.

1. கடந்த 05 வருடங்களாக தொழில் வாய்ப்புக்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களின் எண்ணிக்கை
2. இன அடிப்படையில் கடந்த 05 வருடங்களில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களின் எண்ணிக்கை
3. ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் தகைமை
4. விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டமைக்கான காரணம்
5. ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை
6. இன அடிப்படையிலான தெரிவு என்ன அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்ற விபரம்

கோரப்பட்ட தகவல்கள் பிரதேச செயலகத்தில் இல்லை என்ற பதில் சாந்தனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தகவல்களை பெறுவதற்காக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உதவி ஆணையாளரை கேட்குமாறு அறிவிக்கப்பட்டது.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தொடர்பாளர் இந்த விடயத்திலான முன்னேற்றம் பற்றி அறிந்து கொள்வதற்காக சாந்தனை தொடர்பு கொண்டார். சாந்தன் உள்நாட்ட லுவல்கள் உதவி ஆணையாளருக்கு குறித்த தகவல்களை கோரி விண்ணப்பப் படிவம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார் என்ற விடயம் தெரிய வந்தது. சிறுபான்மைய இனங்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை மறுக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் கேட்டு உறுதிப்படுத்த தகவல் சட்டம் முக்கியமான ஒன்று என்பதை சாந்தன் புரிந்துகொண்டார்.

மேலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அச்சமின்றி அதிகாரிகளை கேள்வி எழுப்பு வதற்காக இந்த தகவல் அறிவதற்கான சட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது என்பதை சாந்தன் புரிந்து கொண்டதோடு அதுபற்றி அறிவூட்டல் செய்யவும் முயற்சி செய்வதாக தெரிவித்தூர்.

• தனிநபர் பாதுகாப்பை கருதி அடையாளம் மாற்றப் பட்டிருக்கின்றது.

இந்த தகவல் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் (ருளுயுஐனு) இணைந்து தகவல் மற்றும் தொடர்பாடல் (ளுனுபுயுP) தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய ஒருவரால் முன்வைக்கப்பட்டதாகும்.

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *