News

அகதிகள் சார் விடயங்களுக்கு பொறுப்புள்ள அரச அதிகாரம் எது?

By In

தகவல் அறியும் விண்ணப்பதாரரின் பொதுவான அனுபவம், கோரப்பட்ட தகவல்கள் எமது எல்லைக்குள் வராது என்று ஒரு பொது அதிகாரியிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெறுவது.

பல சந்தர்ப்பங்களில், இதுபோன்ற நிகழ்வு ஏற்படின், தகவல் கோரிக்கையாளர் மேலதிக ஆராய்ச்சி செய்து,  தனது குறிப்பிட்ட வினவலுக்கு விடை வழங்குவதற்கு பொறுப்பாகக்கூடிய மற்றொரு பொது அதிகாரத்தைக் கண்டறிவார்.

இருப்பினும், வெவ்வேறு அரசாங்க நிறுவனங்கள் அனைத்தும் கோரப்பட்ட தகவல்களை அதிகாரப்பூர்வமாக வழங்க இயலாது என்று கூறினால் என்ன செய்வது? கோரிக்கையாளர் இதன் பின் என்ன நடவடிக்கை எடுப்பார்?

இலங்கைக்கு வரும் அகதிகள் குறித்து இரண்டு வெவ்வேறு பொது அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். தகவல் அறியும் விண்ணப்பங்கள் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்கும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும் அனுப்பப்பட்டன. இந்த இரண்டு அரசாங்க அதிகாரங்களும் கோரப்பட்ட தகவல்கள் தங்கள் திணைக்களத்தில் இல்லை என்று அல்லது அது அவர்களின் எல்லைக்குள் வரவில்லை என்று பதிலளித்தன.

தகவல் அறியும் விண்ணப்பத்தில் உள்ள விடயங்களுக்கு அவர்கள் பொறுப்பேற்க முடியாது என்ற அடிப்படையில் தகவல் கோரிக்கையை நிராகரிக்கும் பொது அதிகாரசபை, இதுபோன்ற விடயங்களுக்கு எந்த அரச திணைக்களம் பொறுப்பேற்கும் என்பதைக் குறிப்பிட முயற்சி செய்தால், அது தகவல் கோரும் எவராலும் வரவேற்கப்படும் ஒரு செயலாக அமையும்.

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *