News

பின்தங்கிய கண்டிய கிரம மக்களுக்கு சிறந்த பாதை அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தகவல் அறிவதற்கான சட்டத்தின் அடிப்படையிலான விண்ணப்பம்

By In

மரணத்திற்கும் வாழ்விற்கும் இடையில் போராட்டம் நடத்தும் நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு பின் தங்கிய கிராமமாக கண்டி மாவட்டத்தில் பஹத ஹேவாஹெட்ட பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள கம்பிலியாவ என்ற கிரமம் இருந்து வருகின்றது. இப்பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் விவசாயத்தை நம்பி வாழும் குடும்பங்களாகும். அவர்களது விவசாய உற்பத்திகளை சந்தைக்கு கொண்டு வருவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கின்றது. ஒழுங்கான பாதை இல்லாததால் அவற்றை கழுத்தில் சுமந்து கொண்டு காட்டு வழியால் வருகின்ற போது மிருகங்கள், விச ஜந்துக்களாலும், வேறும் உயிர் ஆபத்துக்களை எதிர் நோக்குவதோடு காயங்களுக்கும் உள்ளாகின்றனர். அதனால் அவர்களது கிராமத்திற்கு முறையானதும் ஒழுங்கானதுமான ஒரு பாதையை அமைத்து தருமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நீண்ட காலமாக பாதை இல்லாத கஷ்டமான நிலையை அனுபவித்து வரும் அவர்களுக்காக பாதை தொடர்பாக சிந்தித்துக் கொண்டிருந்த நிலையில் தகவல் அறிவதற்கான சட்டம் பற்றிய தகவல்களை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நடத்திய செயலமர்வில் கலந்துகொண்ட இளைஞர்கள் அறிந்து கொண்டனர். அதனால் இந்த கிராமத்திற்கான பாதையை அமைப்பதில் ஏற்பட்டிருக்கும் தாமதம் பற்றிய தகவல்களை கோரி தகவல் அறிவதற்கான விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பிக்க திட்டமிட்டனர். அதன்படி 2018 நவம்பர் மாதம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.
பாதையை அமைப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் பாதை அமைக்கும் பணி மேலும் தாமதமடையலாம் என்று விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு சில வாரங்களின் பின்னர் அதற்கு பதிலாக தெரிவிக்கப்பட்டது.
இருந்தாலும் அவர்களது வேண்டுகோள் வீன் போகவில்லை. ஒருசில வாரங்களில் பாதை அமைப்பதற்கான கற்கள், சீமெந்து, மற்றும் தேவையான பொருட்கள் கொண்டு வரப்பட்டன. பாதைக்கான வேலைகள் மிகவும் விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்தியது. பாதை வேலைகள் இன்னும் ஆரம்பிக்கப்படாத போதும் தகவல் அறிவதற்கான சட்டத்தால் இந்தளவிற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்றதால் அவர்கள் இந்த சட்டம் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். முதல் முறையாக அதிகாரிகள் இவ்வாறான ஒரு வேண்டுகோள் தொடர்பாக அறிந்துகொண்டதோடு பின்தங்கிய நிலையில் இருந்த கிரமத்திற்கான பாதை அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுத்தனர்.
எதிர்காலத்திலும் இளம் தலைமுறையினர் அதிகாரிகளை இவ்வாறு தகவல் சட்த்தின் ஊடாக கேள்வி எழுப்புவதன் மூலம் கூடுதலான நன்மை அடையலாம் என்று மக்கள் கருதுகின்றனர். தகவல் சட்டத்தின் மூலமே கிராம மக்களது தேவையை அடைந்து கொள்வதற்கான வழிகாட்டல் செய்யப்பட்டதாக இளைஞர்;களும் திருப்தி அடைகின்றனர்.
இந்த தகவல் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் இணைந்து தகவல் மற்றும் தொடர்பாடல் தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய சிலரால் முன்வைக்கப்பட்டதாகும்.

News

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு…

By In
News

நுவரெலியாவில் சட்டவிரோதமான கட்டுமானங்களின் பின்னணியில் அரசியல் அதிகாரமா?

ஆர்.எப்.எம் சுஹேல்- நுவரெலியா உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் உட்பட பலரது வீடுகள் உரிய விதிமுறைகளைப் பேணாது சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக…

By In
News

தேசிய பாடசாலை தொடர்பான கட்டுக்கதையும் ஆசிரியர் வெற்றிடங்களும்

மகேந்திர ரந்தெனிய மூன்று வருடங்களாகக் கல்வி சீர்திருத்தக் குழுக்களுக்குப் பல கோடிக்கணக்கில் பணம் செலவழித்தும் எந்தப் பலனும் கிடைக்கப்பெறவில்லை என்பதை ஊடகங்கள் அவ்வப்போது வெளிப்படுத்திவருகின்றதை  காணக்கூடியதாக உள்ளது….

By In
News

தொடரும் இலங்கை – இந்திய மீனவர் கைதுகள்!

க.பிரசன்னா இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்ட வரலாற்றைக் கொண்டது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட பின்னர் ஆரம்பமான பிரச்சினை, இப்போது சட்டவிரோத மீன்பிடி முறையினால் வேறு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *