News

சைபர் குற்றங்களில் ஒரு தெளிவான அதிகரிப்பு

By In

கோவிட்-19 (COVID-19) தொற்றுநோயுடன் உள்ளூர் சமூகத்தின் இணைய பயன்பாட்டில் தெளிவான மாற்றம் உள்ளது. பாடசாலைகள் மற்றும் பணியிடங்கள் மூடப்பட்டதன் காரணமாக கடந்த 4 மாதங்களில், பெரும்பான்மையானவர்கள் ஆன்லைன் தளங்கள் வழியாக வேலை செய்ய முயன்றனர்; ஆன்லைன் கற்றல் மற்றும் வேலை நடைமுறைகளைத் தொடங்கினர்; வணிகங்களை நடத்தினர்; வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் செய்தி, தகவல் மற்றும் பொழுதுபோக்குகளை அணுகினர். தற்போது பல இணைய பயனர்கள் (internet users) இருப்பதால், சைபர்/இணைய பாதுகாப்பு (cyber security) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். ஏனெனில் சைபர் குற்றங்கள், சைபர் கொடுமைப்படுத்துதல் போன்றவற்றில் அதிகரிப்பு உள்ளது. மீறல்களுக்கு எதிராக எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்து விழிப்புடன் இருப்பதுடன், சைபர் பாதுகாப்பு சுய பயிற்சி செய்யப்பட வேண்டும். சைபர்ஸ்பேஸில் (cyberspace) அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இலங்கை கணினி தயார்நிலை குழு (Sri Lanka Computer Readiness Team (CERT)) ஏற்கனவே சேவையில் உள்ளது. CERT என்பது பொது மக்களின் இணைய பாதுகாப்பு சிக்கல்களை எதிர்கொள்ள தொடர்பு கொள்வதற்கென பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், 2019 முதல் 2020 வரையிலான காலத்திற்குள் இலங்கை CERT நிறுவனத்திடம் புகாரளிக்கப்பட்ட இணைய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த தகவல்களைக் கோரினோம். அதன்படி, நாங்கள் பெற்ற தகவல்கள் ஜனவரி 2020 முதல் ஜூலை 15, 2020  வரையிலான 7 மாத காலப்பகுதியில் பதிவான சைபர் குற்ற நிகழ்வுகள் 2019 ஆம் ஆண்டில் பதிவான நிகழ்வுகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளன என்பதை பிரதிபலிக்கின்றன. இது முந்தைய ஆண்டை விட 110.24% அதிகரிப்பு ஆகும். அனைத்து புகார்களிலும், சமூக ஊடகங்கள் தொடர்பான சைபர் குற்ற புகார்கள் மிகக் கூடுதலாக உள்ளன. ஜூலை 2020 க்குள், 2019 ஆம் ஆண்டிற்கான சமூக ஊடகங்கள் தொடர்பாக பதிவான மொத்த சைபர் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 63.07% ஆல் அதிகரித்து மொத்தம் 4,547 நிகழ்வுகளாக அதிகரித்துள்ளது. CERT நிறுவனம் அளித்த தகவல்களின் படி, பண மற்றும் மின்னஞ்சல் மோசடிகளும் 80.9% சதவீதம் அதிகரித்துள்ளன. உறுதிப்படுத்தப்பட்டதாக சைபர்-குற்ற பிரிவின் கீழ் எந்த குற்றங்களும் இல்லை என்று அறிக்கை காட்டினாலும், அங்கீகரிக்கப்பட்ட சில நிகழ்வுகள் மறை எண் சதவீதத்தில் (minus percentage) பதிவு செய்யப்பட்டுள்ளன. சைபர் குற்ற சதவீதத்தில் இந்த வளர்ச்சியானது பொதுமக்கள் இணைய பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறது. முக்கியமான விடயம் என்னவென்றால், இலங்கை CERT நிறுவனத்தில் ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகளாவன பதிவான நிகழ்வுகள் மட்டுமே. உங்கள் சைபர்ஸ்பேஸில் நீங்கள் அச்சுறுத்தப்படும்போது, ​​இது போன்ற ஒரு அதிகாரத்திடம் நீங்கள் ஆலோசனையையும் உதவியையும் பெறுவது எப்போதும் சிறந்தது.

News

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு…

By In
News

நுவரெலியாவில் சட்டவிரோதமான கட்டுமானங்களின் பின்னணியில் அரசியல் அதிகாரமா?

ஆர்.எப்.எம் சுஹேல்- நுவரெலியா உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் உட்பட பலரது வீடுகள் உரிய விதிமுறைகளைப் பேணாது சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக…

By In
News

தேசிய பாடசாலை தொடர்பான கட்டுக்கதையும் ஆசிரியர் வெற்றிடங்களும்

மகேந்திர ரந்தெனிய மூன்று வருடங்களாகக் கல்வி சீர்திருத்தக் குழுக்களுக்குப் பல கோடிக்கணக்கில் பணம் செலவழித்தும் எந்தப் பலனும் கிடைக்கப்பெறவில்லை என்பதை ஊடகங்கள் அவ்வப்போது வெளிப்படுத்திவருகின்றதை  காணக்கூடியதாக உள்ளது….

By In
News

தொடரும் இலங்கை – இந்திய மீனவர் கைதுகள்!

க.பிரசன்னா இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்ட வரலாற்றைக் கொண்டது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட பின்னர் ஆரம்பமான பிரச்சினை, இப்போது சட்டவிரோத மீன்பிடி முறையினால் வேறு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *