News

கொழும்பு மாநகர சபை மின்னணு வசதியை தவிர்க்கிறதா?

By In

தொழில்நுட்பம் அதன் திட்டவட்டமான நன்மைகளைக் கொண்டுள்ளது; இதற்கு எதிராக வாதிடும் எவரும் இருந்தால் அவ்வாறானோர் எண்ணிக்கையில் மிகக் குறைவு. இன்றுவரை தொழில்நுட்பம் எங்களுக்கு வழங்கிய மிகச் சிறந்த வசதிகளில் ஒன்று மின்னஞ்சல். இவ்வாறான போது, ஒரு தகவல் அதிகாரியிடமிருந்து மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்திற்கு பதில் பெறுவது ஏன் மிகவும் கடினம்?

அவர்களின் வலைத்தளங்களின்படி பார்த்தால், பெரும்பாலான பொது அதிகாரிகள் மின்னஞ்சல் வசதிகளைக் கொண்டுள்ளனர். இருப்பினும், பெரும்பாலான அரச திணைக்களங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களுக்கு அரிதாகவே பதிலளிக்கின்றன என்பதை போதுமான தகவல் அறியும் விண்ணப்பங்களை அனுப்புபவர்கள் நன்கு அறிந்திருப்பர். இதனுடன் ஒப்பிடுகையில், ஒரு காகித அடிப்படையிலான கடிதம் இந்த திணைக்களங்களிடமிருந்து அதிக கவனத்தை ஈர்க்கிறது.

ஒரு சந்தர்ப்பத்தில், குப்பை சேகரிப்பு தொடர்பான தகவல் அறியும் விண்ணப்பம் கொழும்பு மாநகர சபைக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டபோது, ​​எந்த பதிலும் கிடைக்கவில்லை. பாரம்பரிய அஞ்சல் சேவையைப் பயன்படுத்தி அச்சிடப்பட்ட விண்ணப்பம் அனுப்பப்பட்ட பின்னரே பதில் கிடைத்தது.

பாரம்பரிய அஞ்சல் (குறிப்பாக நீங்கள் அனைத்து உறைகளையும் சேர்த்தால்) அதிகளவிலான காகிதங்களைப் பயன்படுத்துகிறது. இந்த காகிதங்களில் பெரும்பாலானவை மறுசுழற்சி செய்யப்பட்டிருக்காது. மேலும், தட்டச்சு செய்தபின் ஆவணம் அச்சிடப்பட்டால் அது அச்சுப்பொறி மை மற்றும் மின்சாரம் இரண்டையும் பயன்படுத்துகிறது – மாறாக மின்னஞ்சல் பயன்படுத்தப்பட்டால் மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

அத்துடன் இங்கு நேரத்தின் கேள்வியும் உள்ளது. ‘அனுப்பு’ பொத்தானை (‘Send’ button) கிளிக் செய்யும் நேரத்தை விட, ஒரு மின்னஞ்சல் அதன் இலக்கு மின்னஞ்சல் கணக்கை அடைய மிகச்சிறியளவிலான மேலதிக நேரத்தையே எடுக்கும். இது தகவல் அறியும் விண்ணப்பதாரர், தகவல் அலுவலர் இருவருக்குமே சாதகமாக இருக்கும்.

அப்படியானால், இந்த நவீன காலங்களில் நம் நாட்டில் உள்ள அமைச்சகங்களால் நத்தை அஞ்சலை (snail mail) ஏன் இவ்விதத்தில் வலியுறுத்துகின்றன? இதற்கு காரணம் தொழில்நுட்பத்தில் விருப்பமின்மையா? அல்லது தொழில்நுட்ப அறிவின் பற்றாக்குறையா?

காரணம் எதுவாக இருந்தாலும், நாடு முழுவதிலும் உள்ள தகவல் அலுவலர்கள் மின்னணு அஞ்சல் முறையுடன் தொடர்பு கொள்ள தயாராக இருந்தால் அது பலருக்கும் நன்மை பயக்கும்.

News

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு…

By In
News

நுவரெலியாவில் சட்டவிரோதமான கட்டுமானங்களின் பின்னணியில் அரசியல் அதிகாரமா?

ஆர்.எப்.எம் சுஹேல்- நுவரெலியா உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் உட்பட பலரது வீடுகள் உரிய விதிமுறைகளைப் பேணாது சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக…

By In
News

தேசிய பாடசாலை தொடர்பான கட்டுக்கதையும் ஆசிரியர் வெற்றிடங்களும்

மகேந்திர ரந்தெனிய மூன்று வருடங்களாகக் கல்வி சீர்திருத்தக் குழுக்களுக்குப் பல கோடிக்கணக்கில் பணம் செலவழித்தும் எந்தப் பலனும் கிடைக்கப்பெறவில்லை என்பதை ஊடகங்கள் அவ்வப்போது வெளிப்படுத்திவருகின்றதை  காணக்கூடியதாக உள்ளது….

By In
News

தொடரும் இலங்கை – இந்திய மீனவர் கைதுகள்!

க.பிரசன்னா இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்ட வரலாற்றைக் கொண்டது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட பின்னர் ஆரம்பமான பிரச்சினை, இப்போது சட்டவிரோத மீன்பிடி முறையினால் வேறு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *