Uncategorized

கொழும்பில் உள்ள ஒரு பிரதான ஏரியின் தூய்மை மீது ஒரு கவனிப்பு

By In

கொழும்பு நகரத்தில் முக்கியத்துவமுள்ள பேரே ஏரி (Beira Lake) நகரின் குடியிருப்பாளர்களுக்கும் பிற இலங்கையர்களுக்கும் நன்கு தெரிந்த ஒரு நீர்நிலையாகும். இந்த ஏரிக்கு அருகில் பல உயரமான கட்டிடங்கள் மற்றும் கட்டுமான தளங்கள் உள்ளன. பேரே ஏரியின் பச்சை நிற நீரில் உள்ள மாசுக்களின் அளவு குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக இருப்பதாக அறியப்படுகிறது. இந்த ஏரியிலிருந்து எழும் துர்நாற்றம் குறித்து குறை தெரிவித்தவர்களும் உள்ளனர். இவற்றை கருத்தில் கொண்டு தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு (SLLDC) அனுப்பப்பட்டதுடன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் சில தகவல்கள் பெறப்பட்டன.

மேற்கூறிய பொது அதிகாரத்தின் பதிலில், கடந்த ஆண்டு கிழக்கு பேரே ஏரி மற்றும் மேற்கு பேரே ஏரி ஆகியவற்றில் “தேவையான அடி நிலை வரை” (“up to required bed level”) தூர்வாரல் (dredging) பணிகளில் எஸ்.எல்.எல்.டி.சி. ஈடுபட்டுக் கொண்டிருக்கிறதாக கூறப்பட்டது. மேலும், இந்த ஆண்டுக்குள் தெற்கு பேரே ஏரியில் தூர்வாரல் மற்றும் நீர் தர மேம்பாட்டு பணிகளை எஸ்.எல்.எல்.டி.சி மேற்கொள்ள எதிர்பார்க்கிறது எனவும் கூறப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பேரே ஏரியை சுத்தம் செய்ய மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு (Ministry of Megapolis & Western Development) / இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் என்ன நடவடிக்கைகள் எடுத்தது என்று கேட்கப்பட்டபோது, ​​ தூர்வாரல் பணிகளுடன் இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் ஏரி பகுதியைச் சுற்றியுள்ள லீனியர் பூங்காவின் (Linear Park ) அபிவிருத்தி பணிகளில் கலந்து கொண்டதாக விளக்கப்பட்டது.

அத்துடன் பேரே ஏரியை சுத்தம் செய்வதற்கான செயல் திட்டம் கீழே உள்ள அரசாங்க வலைப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது:

http://www.cabinetoffice.gov.lk/cab/index.php?option=com_content&view=article&id=16&Itemid=49&lang=en&dID=9862

தகவல் அறியும் விண்ணப்பம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதா என்று கேள்வி எழுப்பியது. இதற்கான பதில், தேவையான கொள்முதல் செயல்முறை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதாகும்.

அத்துடன் கட்டுமானப் பொருட்கள், கட்டுமான நடைமுறைகள் மற்றும் பேரே ஏரியைச் சுற்றியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பிற கட்டிடங்களிலிருந்து வெளியேறும் கழிவுகள் போன்றவை பேரே ஏரி மற்றும் அதில் வாழும் உயிரினங்களை பாதிப்பதில்லை என்பதை உறுதிப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் எஸ்.எல்.எல்.டி.சியிடம் கேட்கப்பட்டது. இதற்கு இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம், இந்த நீர்நிலையில் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தமது பொறுப்பு என்றும் லீனியர் பார்க் ஆனது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் வருகிறது என்றும் பதிலளித்தது; சுற்றியுள்ள தரைப்பகுதியில் எந்த கழிவு வெளியேற்றத்தையும் கட்டுப்படுத்த எஸ்.எல்.எல்.டி.சி க்கு அதிகாரம் இல்லை என்று கூறப்பட்டது.

News, Uncategorized

லங்காதீப செய்திப்பிரிவிற்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் விஜயம்

இணைந்த செயற்பாட்டு அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில், லங்காதீப பத்திரிகையின் பிரதம ஆசிரியர், உப ஆசிரியர் மற்றும் செய்திப்பிரிவு ஊடகவியலாளர்களை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) RTI குழுவினர்…

By In
News, Uncategorized

சமூக பங்கேற்பு நிருவாக கருத்தியலும் இலங்கையில் உள்ளூராட்சி நிறுவனங்களும்

– சாமர சம்பத் பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைப்புகள் போன்ற தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்புகளில், மக்களுக்கு மிக நெருக்கமான நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூராட்சி நிறுவனங்களேயாகும். தற்போதைய…

By In
News, Uncategorized

சபாநாயகர் பாராளுமன்ற மரபுகளை மீறியுள்ளாரா?

– சாமர சம்பத் முழுமையான ஜனநாயக ஆட்சிக் கட்டமைப்பில் சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றம் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. பாராளுமன்றம் சுயாதீன நிறுவனமாக நடத்தப்பட வேண்டும்…

By In
News, Uncategorized

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களைக் கோர முடியுமா?

தகவல் அறியும் உரிமைச் சட்டம், அதன் முக்கியத்துவம் மற்றும் RTI சட்டம் பற்றிய பொதுமக்களின் புரிதலை மேம்படுத்தும் நோக்கத்துடன், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் சமூக ஊடக தளங்களில்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *