Uncategorized

கொழும்பின் இந்த பகுதியிலுள்ள கால்வாய் எவ்வளவு சுத்தமாக உள்ளது?

By In

தெமடகொடயில் உள்ள கால்வாய் மற்றும் அதன் தூய்மை குறித்து 2019 டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு (எஸ்.எல்.எல்.ஆர்.டி.சி) தகவல் அறியும் விண்ணப்பம் அனுப்பப்பட்டது. கால்வாயில் மிகவும் இருண்ட நிறமுடைய, அசுத்தமான தோற்றமுள்ள தண்ணீர் இருந்ததே இதற்குக் காரணம். தகவல் அறியும் விண்ணப்பத்தில் உள்ள கேள்விகள் முக்கியமாக, இந்த நீர்நிலையானது உயிர்களுக்கு அல்லது சுற்றியுள்ள சூழலுக்கு தீங்கு விளைவிக்கவில்லை என்பதை ஆராய்ந்தறிய எஸ்.எல்.எல்.ஆர்.டி.சி எடுத்த நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தியது.

அருகிலுள்ளவர்களுக்கு சுகாதார ஆபத்தை ஏற்படுத்தாது மற்றும் சுற்றுச்சூழல் அல்லது உயிர்ப்பல்வகைமைக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கால்வாயின் நீர் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விண்ணப்பம் கேள்வி எழுப்பியது. அத்துடன் இந்த கால்வாயின் அழகியல் மதிப்பை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தகவல் கோரிக்கையாளரால் கேட்கப்பட்டது.

இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் அதனது பதிலில், தெமடகொட கால்வாயில் நீரின் தரம் குறைந்து வருவது பெரும்பாலும் அப்பகுதியின் குடியிருப்பாளர்களின் நடவடிக்கைகளான குப்பைகள் கொட்டுதல் மற்றும் கழிவுநீர் வெளியேற்றல் நடவடிக்கைகள் போன்ற காரணங்களால் ஆகும் என்றது. இத்தகைய நடவடிக்கைகள் மற்றும் கால்வாய் இடஒதுக்கீட்டில் (canal reservation) அங்கீகரிக்கப்படாத அத்துமீறல்கள் (encroachments) காரணமாக சுற்றுச்சூழல் மற்றும் உயிர்ப்பல்வகைமை பாதிக்கப்படலாம்.

கால்வாயின் அழகியல் மதிப்பை மேம்படுத்துவது தொடர்பாக, தெமடகொட கால்வாயில் தினசரி பராமரிப்பு நடவடிக்கைகளான மேற்பரப்பு துப்புரவு செய்தல், தூர்வாரல், பிடி குழிகள் மற்றும் பக்க வடிகால்களை சுத்தம் செய்தல், மற்றும் இட ஒதுக்கீடு பகுதி மற்றும் கால்வாய் கரையின் பராமரிப்பு போன்றவற்றை இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் பொறுப்பேற்றுள்ளது என்று பதில் வழங்கப்பட்டது. மேற்கண்ட தகவல்களுக்கு மேலதிகமாக, 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இருந்து அமோனியா, நைத்திரேற்றுக்கள், பொசுப்பேற்றுக்கள், கரைந்த ஒட்சிசன் போன்றவற்றின் வெவ்வெறு மட்டங்கள் தொடர்பான வரைகலை தரவுகளையும் எஸ்.எல்.எல்.டி.சி வழங்கியது. இந்த விளக்கப்படங்களைப் படிப்பதன் மூலம் எளிதில் கவனிக்கக்கூடிய சில விடயங்கள் என்னவென்றால், கால்வாயில் கலங்கள் தன்மை (turbidity), அமோனியா (NH3) மற்றும் கரைந்த ஒட்சிசன் (D.O.) மட்டங்கள் 2017 அல்லது 2018 இல் இருந்ததை விட 2016 இல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்தன என்பதாகும். அதே நேரத்தில், ஒட்டுமொத்த உப்புத்தன்மையின் (salinity) அளவு 2018 இல் மிக அதிகமாக இருந்தது. (வழங்கப்பட்ட அனைத்து வரைகலை தகவல்களுக்கும், இந்த கட்டுரையுடன் வரும் வரைபடங்களைப் பார்க்கவும். இவை பொது அதிகாரத்தால் வழங்கப்பட்டவையே ஆகும்.)

News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
Uncategorized

20 மில்லியன் மக்களுக்கு 40 மில்லியன் கையடக்கத் தொலைபேசி சாதனங்கள்!

ஜே.ஏ.ஜோர்ஜ் உலகில் தொலைத் தொடர்பு துறை நாளாந்தம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில்,  அதன் வேகத்திற்கேற்ப இணையம் மற்றும் கையடக்க தொலைபேசி பாவனை அதிகரித்து வருவதை அண்மைய தரவுகள்…

By In
News, Uncategorized

லங்காதீப செய்திப்பிரிவிற்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் விஜயம்

இணைந்த செயற்பாட்டு அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில், லங்காதீப பத்திரிகையின் பிரதம ஆசிரியர், உப ஆசிரியர் மற்றும் செய்திப்பிரிவு ஊடகவியலாளர்களை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) RTI குழுவினர்…

By In
News, Uncategorized

சமூக பங்கேற்பு நிருவாக கருத்தியலும் இலங்கையில் உள்ளூராட்சி நிறுவனங்களும்

– சாமர சம்பத் பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைப்புகள் போன்ற தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்புகளில், மக்களுக்கு மிக நெருக்கமான நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூராட்சி நிறுவனங்களேயாகும். தற்போதைய…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *