News

உணவட்டுன கலிடோ கடற்கரை தொடர்பாக தகவல் கோரியதற்கு தகவல் பெறுவதற்கான உரிமைச் சட்டத்தை மறுக்கும் அதிகாரி

By In

பொதுமக்கள் ஆர்வம் காட்டும் விடயங்கள் தொடர்பாக தகவல்களை பெறுவதற்கான வசதியை தகவல் பெறுவதற்காக அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள உரிமைச் சட்டம் வழங்குகின்றது. அன்றாட வாழ்க்கையில் மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பாக தகவல்களை அறிவது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வொன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனாலும் சில தகவல் அதிகாரிகளுக்கு இந்த சட்டம் தொடர்பான அறிவு குறைபாடாக காணப்படுகின்றது. பல்கலைக்கழக மாணவியான சந்தமாலிக்கு கலுத்தறையில் அமைந்துள்ள கலிடோ கடற்கரை பற்றிய சில தகவல்களை அவரது பல்கலைக்கழக ஆய்வூ நடவடிக்கை ஒன்றுக்காக பெற வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்காக அவர் எழுத்து மூலமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். பின்னர் அது தொடர்பாக தொலைபேசி மூலமும் வினவினார். ஆனாலும் தகவல் மறுக்கப்பட்டது.
நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய சந்தமாலி தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தின் மூலம் இவ்வாறான தகவல்களைப் பெற முடியும் என்ற விடயத்தை அறிந்துகொண்டார். அதனால் அவருக்கு அவரது ஆய்வு நடவடிக்கைக்கு தேவையான தகவல்களை பெற தகவல் சட்டம் மூலமான விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் இலகுவாக அமையும் என்று கருதினார். அதற்கமைய கலுத்தறை பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகின்ற தகவல் அதிகாரியிடம் தகவல் பெறுவதற்கான விண்ணப்பப் பபடிவம் மூலம் தேவையான தகவல்களை கோரினார்.
ஆனாலும் ஆச்சரியப்படத்தக்க பதில் வழங்கப்பட்டது. உங்களால் வினா அடிப்படையில் கோரப்பட்ட தகவல்களை எங்களால் வழங்க முடியாது. தகவல் கோரியவருக்கான முழுமையான பதிலாக இந்த பதில் அமைந்திருந்தது.
அத்துடன் தகவல் கோரிய மாணவிக்கு மாவட்ட செயலகத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பும் வந்தது. அந்த தொலைபேசி அழைப்பின் மூலம் தகவல் அறிவதற்கான விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கு முன்னர் தகவல் கோரியவர் யார் என்ற விடயம் கேட்கப்பட்டது.
சந்தமாலி அவரது தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவத்தில் அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும் அவரால் புரிந்துகொள்ள முடிந்த ஒரு விடயம் தான் பிரதேச செயலகத்தில் உள்ள தகவல் அதிகாரிக்கு தகவல் பெறுவதற்கான சட்டம் பற்றிய போதுமான அறிவு இல்லை என்ற விடயம்.
அத்துடன் தகவல் அறிவதற்கான சட்டத்தின் அடிப்படையில் தகவல் அதிகாரி பதிலளிப்பதற்கு உடன்பட்டிருந்தாலும் வழங்கியிருந்த பதிலானது அதற்கு ஏற்ப இருக்கவில்லை. அதே நேரம் சந்தமாலியினது பெற்றோரின் வற்புறுத்தலுக்கமைய அவரால் அந்த தகவல் கோரும் நடவடிக்கையை முன்னெடுக்க விரும்பவில்லை. அதே நேரம் இந்த சட்டத்தின் அடிப்படையில் உரிய அதிகாரிகள் போதுமான கரிசணை காட்டாமை தொடர்பாக சந்தமாலி கவலை தெரிவிக்கின்றார். ஆனாலும் இந்த அறிவை எதிர்காலத்தில் அவரது நண்பர்களின் தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் உதவி செய்வதாகவும் அவர் உறுதியளிக்கின்றார்.
இந்த தகவலானது நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் மற்றும் தொடர்பாடல் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்கு பற்றியவர்களால் சமர்ப்பிக்கப்பட்டதாகும்.

“இந்த இடுகையின் உள்ளடக்கங்கள் SLPIஇன் முழுப் பொறுப்பாகும், மேலும் USAID அல்லது ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களை அவசியமாக பிரதிபலிக்கவில்லை.”

News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
News

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொறிமுறை வலுப் பெற வேண்டும்!

வீ.பிரியதர்சன் சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப்பொறுப்பு, பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெறவே அனைவரும் முயற்சிக்கின்றனர். ஆனால் பிரச்சினைகள் வரும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. இதற்கு முக்கிய…

By In
News

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு…

By In
News

நுவரெலியாவில் சட்டவிரோதமான கட்டுமானங்களின் பின்னணியில் அரசியல் அதிகாரமா?

ஆர்.எப்.எம் சுஹேல்- நுவரெலியா உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் உட்பட பலரது வீடுகள் உரிய விதிமுறைகளைப் பேணாது சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *