News

தகவல் அறிவதற்கான சட்டம் : – பிரதேச செயலகத்திற்கு தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீ முருகன் வீதி திருத்தப்பட்டது.

By In

கரவெட்டி பிரதேச சபைக்குட்பட்ட J/353 ஆம் இலக்க கிராம சேவகர் பிரிவில் ஸ்ரீ முருகன் குடியேற்றத்திற்கு செல்லும் பாதை 32 மில்லியன் ருபா செலவில் பழுது பார்க்கப்பட்டது. நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய இளைஞர் குழுவொன்று தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சமர்ப்பித்த விண்ணப்பப் படிவத்திற்கே இந்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பகுதிக்கான பாதை பல வருடங்களாக மிகவும் மோசமான முறையில் பழுதடைந்து காணப்பட்டது. குறிப்பாக மழை காலங்களில் இப்பாதையால் பிரயாணம் செய்யும் பாதசரிகள், மாணவர்கள், மற்றும் பல தரப்பட்டவர்கள் கடுமையான சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். பாதிப்பு அதனோடு மாத்திரம் நிற்கவில்லை. இந்த பாதையால் பயணிக்கும் வாகனங்கள் பாதையில் ஏற்பட்டிருந்த குழிகளில் விழுந்து பழுதடையும் நிலை இருந்த வந்தது. அத்துடன் அடிக்கடி விபத்துக்களும் இடம்பெற்று வந்தன. அதனால் அவலத்தை தாங்க முடியாத மக்கள் மண் மற்றும் கற்களை போட்டு குழிகளை நிரப்பி பாதையை தற்காலிகமாக திருத்தினர்.
தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி அறிந்துகொண்ட இளைஞர் குழுவொன்று அதற்கான விண்ணப்பப் படிவம் ஒன்றை கரவெட்டி பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்தது. இந்த பாதை திருத்த வேலைகள் பற்றியும் அதற்கான எதிர்கால திட்டங்கள் பற்றியும் தகவல்களை கோரி விண்ணப்பத்தை சமர்ப்பித்தனர்.
தகவல் அறிவதற்காக வழங்கப்பட்ட விண்ணப்பத்தின் பிரதிபலனாக தகவல்கள் வழங்கப்பட்டது மாத்திரமன்றி பாதையை செப்பனிட்டு பழுது பார்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 76 மீட்டர் நீளமானதான இப்பாதை முழுமையாக பழுது பார்க்கப்பட்டது. இரண்டு மாத கால இடைவெளிக்குள் இந்த பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன. தகவல் அறிவதற்கான சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை குறித்து மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
பயிற்சி செயலமர்வு மூலம் அவர்கள் பெற்றுக்கொண்ட தகவல் அறிவதற்கான பயிற்சி காரணமாக மக்களது வாழ்க்கையின் மேம்பாட்டை குறிக்கோளாகக் கொண்டு மேலும் பல செயற்பாடுகளை முன்னெடுக்க
முடியும் என்று இளைஞர்கள் கருதுகின்றனர். எதிர்காலத்தில் இத்தகைய விடயங்களை கையாழ்வதற்காக தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்த முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
இந்த தகவலானது நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் மற்றும் தொடர்பாடல், தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்கு பற்றியவர்களால் சமர்ப்பிக்கப்பட்டதாகும்.

“இந்த இடுகையின் உள்ளடக்கங்கள் SLPIஇன் முழுப் பொறுப்பாகும்இ மேலும் USAID அல்லது ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களை அவசியமாக பிரதிபலிக்கவில்லை.”

News

RTI நடவடிக்கை: மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பாக தகவல் கோரல்

அதிகமான மாணவர்களது கனவாக இருந்து வருவது போட்டிப் பரீட்சையான கல்விப் பொதுத் தராதர (உ.தர) பரீட்சையின் பின்னர் உயர் கல்விக்காக அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுவதுதாகும். உயர்…

By In
News

RTI நடவடிக்கை: புதிய கம்பஹா பஸ் நிலையம் தொடர்பான தகவல் கோரல்

கம்பஹாவில் பயன்படுத்தப்படுகின்ற பழைய பஸ்நிலைய கட்டிடம் இல : 2 இற்கு பதிலாக மேம் பாலத்திற்கு அருகாமையில் புதிதாக பஸ் நிலைய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. 2018 ஆம்…

By In
News

RTI நடவடிக்கை: போக்குவரத்து தேவையை அடைய தகவல் சட்டம்

மாபலகம கிராம மக்களுக்கு போக்குவரத்திற்கு பஸ் சேவை இன்றி சிரமப்படுகின்றனா;. நாகொடை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாபலகமவில் இருந்து பிடிகலைக்கு போவதற்கான பொதுப் போக்குவரத்து பஸ் சேவை…

By In
News

RTI நடவடிக்கை: தற்காப்பை விட தடுப்பு மேலானது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் டெங்கு எதிர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மிகவு ம் திட்டமிடப்பட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் பல டெங்கு நோயாளிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியு ள்ளன. 2018…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *